ஓரிறையின்
சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று
நிலவட்டுமாக. முன்னிருந்த வேதங்களை
உண்மைபடுத்துவதற்க்காக.
இந்த குர் அருளப்பட்டதாகவும், முந்தைய
வேதங்களை மனிதக்கரங்கள் மாசுபடுத்தி விட்டதாகவும், முந்தைய வேதங்களை குர்
ஆனில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும்.
அல்லாஹ்
தனது அருள் மறைக் குர்
ஆனில் கூறுகிறான். அதன் அடிப்படையில் முஸ்லிம்களும்,
கிருஸ்துவர்களும் நாம் பைபில் வசனங்களையும்
குர் ஆன் வசனங்களையும் ஒப்பாய்வு
செய்ய வேண்டும்.
குர் ஆன் கூறும் தகவல்கள்
உண்மையாக இருப்பின். கிருஸ்துவர்கள் தங்கள்
கொள்கையை மறு ஆய்வு செய்தால்,
அதுதான் இக்கட்டுரையின் உண்மையான நோக்கம் அது பரலோக
வாழ்வுக்கு உகந்ததும் கூட இனி ஒப்பீடு...
கடவுளைப்பற்றி பைபில் வசனம்
தேவன் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் ஏழாவது நாளன்று ஓய்வெடுத்துச் சுகம் பெற்றார் (எக்ஸோடஸ் 31:17)
பின்னர் தேவன் தூக்கத்திலிருந்தும் போதையிலிருந்தும் மனிதன் எழுவது போன்று விழித்தெழுந்தார் (கீதங்கள்-78:65)
கடவுளைப்பற்றி குர் ஆன் வசனம் வானங்களையும் பூமியையும் அவற்றின் இடையில் உள்ளவற்றையும் நாம் ஆறுநாட்களில் படைத்தோம், நம்மைக் களைப்பு தீண்ட வில்லை (குர் ஆன் 50:38) மயக்கமோ உறக்கமோ அவனைத்தீண்டாது (குர் ஆன் 2:255)
இயேசுநாதரைப் பற்றி
பெண்ணே! உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று(மரியாளாகிய) அவளிடம் ஏசு கேட்டார் (யோவான் 2:4)
(மர்யமாகிய) என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து நான் வழிதவரியவனாகவும் ஆகதபடியும் அல்லாஹ் செய்வான் (குர் ஆன் 19:32)
சமாதானத்தை போதிக்க!
பூமியில் சமாதானத்தை நிலைநாட்ட நான் வந்ததாக நினைக்காதே வாளைத்தான் கொண்டு வந்தேன் ஒருவனை அவன் தந்தைக்குக் கெதிராகவும் ஒருத்தியை அவள் தாய்க்கு கெதிராகவும் அமைத்திடவே வந்தேன் – மத்தேயு-10:34.
நான் பிறந்த நாளிலும் மரிக்கும் நாளிலும் நான் உயிர்பெற்று எழும்நாளிலும் சாந்தியும் சமாதானமும் என் மீது நிலைபெற்றிருக்கும் என்றும் (ஈஸாவாகிய அக்குழந்தை கூறிற்று) குர் ஆன்-19:33
கிருஸ்து நம்பிக்கையின் படி இயேசுநாதர் தந்தையில்லாமல் பிறந்தார் என்பதே ஆனல் அதை பைபில் மறுக்கிறது? எப்படி இயேசு.யோசேப்பின் மகன் என்று மத்தேயு சுவிசேஷம்-1:18, லூக்காவின் சுவிசேஷமும்-3:23, கூறுகின்றன.
ஆனால் இயேசு தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதை திருக்குர் ஆன் தான் தக்க காரணத்துடன் உண்மைப் படுத்துகிறது
(நபியே! மர்யமை நோக்கி) ”மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துள்ளான் தூய்மையாகவும் ஆக்கியுள்ளான் அகிலத்துப் பெண்கள் அனைவரையும்விட உன்னை மேன்மையாக்கியும் வைத்துள்ளான்” என்று வானவர் கூறியதை நினைவு கூறும், குர் ஆன்-3:42
இயேசுவின் சீடர்கள் பற்றி பைபில்
இயேசு பீட்டரின் பக்கம் திரும்பி; சாத்தானே! எனக்குப் பின்னால் போ நீ எனக்குத் தடைக்கல்லாக இருக்கிறாய், கடவுளைப் பற்றி உன் இதயத்தில் ஒன்றும்மில்லை; மனிதர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய், மத்தேயு-16:23.
இயேவின் சீடர்கள் அனைவரும் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்று பைபில் மார்க்-14:50 வசனம் கூறுகிறது
இயேசுவின் சீடர்கள் பற்றி திருக்குர் ஆன் அவர்களுள் பலர் (தமக்கு) மாறு புரிவதை ஈஸா உணர்ந்தபோது, (அவர்களை நோக்கி) “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி புரிபவர் யார்? எனக்கேட்டார், அதற்க்குச் சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வுக்காக உம் உதவியாளர்களாக இருக்கிறோம், மெய்யாகவே அல்லாஹ்வை நாங்கள் நம்புகிறோம், ஆனல், திண்னமாக நாங்கள் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்பதற்கு நீர் சாட்சி கூறுவீராக!, எனக் கூறினர் (அன்றி) “எங்கள் இரட்சகனே! நீ (இவருக்கு) அருளிய வேதத்தை நாங்கள் நம்புகிறோம், இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம், எனவே அவரை உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!; என்று அச்சீடர்கள் கூறினர், குர் ஆன்-3:52.53
இறைத்துதர்கள் பற்றி பைபில்
நோவா மதுவைக் குடித்துத் தன் கூடரத்தில் அம்மணமாக கிடந்தார், ஜெனிஸிஸ்-9:21, லோத்து தன் பெண்மக்களுடன் விபச்சாரம் செய்தார், ஜெனிஸிஸ்-19”30, அப்ரகாம் தன் மானத்தைத் தியாகம் செய்தார், ஜெனிஸிஸ்-12:10-15, 20:2, யாக்கோபு தூதுத்துவத்தைக் களவாடினார், ஜெனிஸிஸ்-:27, மோசேயும் ஆரோனும் காட்டிக் கொடுத்தாகப் பழைய ஏற்பாட்டில் குற்றம் சுமத்தப் படுகின்றனர், Deuteronomy-32:51, மோசே இல்லாத நேரத்தில், ஆரோன் ஒரு தங்கக் கன்றுக்குட்டியைச் சமைத்து அதனை வணங்கும்படி இஸ்ரவேலர்களுக்குக் கூறினான், எக்ஸோடஸ்-32:1-6, இவைதான் இறைதூதர்கள் பற்றிய பைபில் கண்ணோட்டம்.
இறைத்துதர்கள் பற்றி திருக்குர் ஆன் திண்ணமாக அல்லாஹ் தன் பிரதிநிதிகளாக ஆதமையும் நூஹையும் தேர்தெடுத்தான், (அவ்வாறே) இப்ராஹீமின் குடும்பத்தையும் இம்ரானுடைய (ஈஸாவின்) குடும்பத்தையும் உலகத்தாருள் (சிறந்தவர்களாகத்) தேர்ந்தெடுத்தோம், குர் ஆன்-3:33
இஸ்மாயில் அல்யசஉ யூனுஸ் லூத் இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரையும்விட மேன்மையாக்கி வைத்தோம், குர் ஆன்-6:86
(நபியே!) ஆற்றலும் அகப்பார்வையும் உடையவர்களாக இருந்த நம் அடியார்களான இப்றாஹீம் இஸ்ஹாக் யாக்கூபையும் நினைத்துப்பாரும், அவர்கள் (மறுமை) வீட்டை நினைவூட்டும் முக்கியப் பணிக்காக் நாம் தேர்தெடுத்தோம், திண்ணமாக அவர்கள் நம்மிடதில் தேர்தெடுக்கப்பெற்ற நல்லடியார்களுள் உள்ளவராகவே இருந்த்தனர், குர் ஆன்-38:45,47
இறைநம்பிக்கையாளர்களே! மூஸாவை (அவதூறு கூறித்) தொல்லைப்படுத்தியவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடவேண்டாம் அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் தூய்மையாக்கிவிட்டான் அவர் அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமானவராகவே இருந்தார், குர் ஆன்-33:69
தவரான குற்றச்சாட்டைவிட்டு ஹாருனை குர் ஆன் விடுவிக்கிறது தங்கக் கன்றுக்குட்டியைச் செய்தவன் சாமிரி என்பவன்தான் ஹாருன் அல்ல என்று தெளிவாக குர் ஆன்-20:85,98 வசனம் கூறுகிறது
மனிதக் கரங்களாள் மாசுபடிந்து நல்லொழுக்கம் போதிக்க வந்த இறைதூதர்கள் மீது அவதூறுகூறி தனது போதனைகள் மூலம் மனித சமுதாயத்தில் எந்த மலர்ச்சியையையும் பெறமுடியமல் பைபில் தடுமாறுகிறது. அதற்க்கு உதரணங்களக புற்றி ஈஸல் போல் உருவாகிக் கொண்டிருக்கும் திருச்சபைகளை கூறலாம்.
வாருங்கள் பைபில் மனிதக்கரங்களாள் மாசு படிந்ததை பற்றி பட்டரை வலையில் உரையாடலாம் என்று கூறி இது போன்ற பல ஆக்கங்கள் இவ்வலையில் இருப்பதை அறிவீர்கள். ஒரு பதிவுக்கும் உங்களிடம் இருந்து ஒரு பின்னூட்டம் கூட இல்லை, சரி விசயத்திற்க்கு வருவோம்
பைபிலின் அபாண்ட குற்றச்சாட்டில் இருந்து சில இறைதூதர்களை விடுவித்தது போல் இன்னும் சில இறைத் தூதர்களையும், குர் ஆன் விடுவிக்கிறது. தொடர்...
0 கமென்ட் :
Post a Comment