ஓரிறையின்
சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று
நிலவட்டுமாக.
நாகர்கோவிலை சேர்ந்த என் கிருஸ்துவ நன்பரை சந்திக்க நேர்ந்தது அவரிடம் இஸ்லாம் கூறும் ஓறிறை கொள்கை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறினார் நானும் விக்ரகங்களை வழிபடமல், கர்தரை மட்டுமே வழிபடுவதாக கூறினார். என்னுடன் கூட வந்து இருந்த எனது இந்து மத நண்பர் அவரிடம் கேட்டார், அப்படி என்றால் ஏன் ஏசுநாதருக்கு சிலை வைத்து வழிபடுகிறீர்கள் என்று. எங்கள் உரையாடலில் எழுந்த கேள்விகளையே கட்டுரை வடிவமாக்கி இருக்கிறேன்
இந்த ஆக்கத்தை ஆத்திரத்தோடவோ அனுதாபத்தோடவோ படிக்காதீர்கள். இதில் இருக்கும் உண்மையை மட்டும் பாருங்கள். என் மார்க்கத்திற்க்கு அப்பாற்பட்டே உள்ளதை உள்ளபடி எடுத்து வைக்கிறேன். ஒரு வேதநூல் என்றால் அதை வீட்டில் உள்ள ஒருவர் வாசிக்க அதை செவியேற்று மற்றவரும் அதன்படி நடக்க வேண்டும். இதுதான் உலகம் வேத நூல்களுக்கு வைத்து இருக்கும் அளவுகோல். இந்த அளவு கோலை வைத்து நான் குறிப்பிடும் வசனங்களை தயவு செய்து பைபிலை கையில் வைத்து கொண்டு பைபிலிருந்தே படியுங்கள்.
தாவீது ராஜாவின் குமாரன் அப்சலோமுன் தாமர் என்னும் தனது சகோதரியின் மீது மோகம் கொண்டு திட்டமிட்டே அவளை கற்பளிக்கிறான் அதன் பின்னர் அவளை மனநோயளியாகவும் ஆக்கிவிடுகிறான், இரண்டாம் சாமுவேல் அதிகாரம் 13 வசனம் 1 முதல் 14 வரை.
லோத் என்னும் தீர்க்கதரிசியின் வரலாற்றில் லோத்தின் மகள்கள் இருவர் தனது தந்தைக்கு மதுபானத்தை புகட்டி அவர் மயக்கமான நிலையில் அவருடன் திட்டமிட்டே சயனிக்கிறாள்கள் இது பற்றிய செய்தியை பைபிலில் ஆதியாகமம் அதிகாரம் 19 வசனம் 30 முதல் 38 வரை.
மேலும் யூதா என்பவரை அவருடைய மருமகள் தாமர் என்பவள் திட்டமிட்டு அவருடன் சயனிக்கிறாள் அதன் மூலம் கற்பம் தரிக்கிறாள் ஆதியாகமம் அதிகாரம் 38 வசனம் 13 முதல் 30 வரை, இந்த யூதா தாமர் இருவருக்கும் உருவாகும் வம்ஷாவழியிலும் ஏசுநாதர் பிறந்ததாகவும் லூக்கா குறிப்பிடுகிறார் இது பற்றிய செய்தியையும் இக்கட்டுரையின் இன்னொரு குறிப்பில் தருகிறேன்.
ஏசக்கியோல் அதிகாரம் 23 இதில் உள்ள வரலாற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காரணம் கூறி South Affrica Publication Board எசக்கியோல் அதிகாரம் 23 தடைசெய்து விட்டது, இப்படி இருக்கும் ஒரு வேதநூல் மனித வாழ்விற்க்கு வழிகாட்டிட முடியுமா என்பது கேள்விக்குறியே
இனி முரண்பாடு கொண்ட வசனங்களை பார்க்கலாம் கர்த்தர் இந்த உலகை படைத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டார் என்று சபாத் தினம் கொண்டாடுகிறார்கள் கர்த்தர் ஓய்வெடுத்தார் என்று ஆதியாகமம் அதிகாரம் 22 வசனம் 2 கூறுகிறது, கர்த்தர் ஓய்வே எடுக்கவில்லை என்றும் ஏசய்யா அதிகாரம் 40 வசனம் 28 கூறுகிறது இதில் எது சரியாக இருக்கும் ஒரு வேதநூல் இவ்வாறு முரண்படலாமா அவ்வாரு இருக்கும் ஒரு வேதநூல் மனிதனுக்கு வழிகாட்டுமா நாம் சிந்திக்க வேண்டாமா.
ஏசுநாதரின் வம்ஷ தாவீது ராஜா உடியாவின் மனைவிக்கும் சாலொமோனை பெற்றாள் அல்லவா அந்த சாலோமோன் வம்ஷத்தில் தான் ஏசுநாதர் பிறந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார் என்றேன் அல்லவா அதன் பட்டியல் இதோ
1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீத்தின் குமாரனான இயேசுகிருஸ்துவினுடைய வம்ச வரலாறு
2 ஆபிரகாம் ஈஸாக்கைப் பெற்றான்; ஈஸாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான் 3 யூதா பாரேசையும் சாரவையும் தாமரிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆரோமைப் பெற்றான் 4 ஆராம் அம்மினதை பெற்றான்; அம்மினதப் நகசோனைப் பெற்றான்; நகோசோன் சல்மோனைப் பெற்றான்; 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபோதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; 6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்த்தவளிடத்தில் சாலோமோனை பெற்றான்; மத்தேயு அதிகாரம் 1 வசனம் 1 முதல் 5 வரை.
யூதாவின் மருமகள் தனது மாமானாரிடத்தில் விபச்சாரத்தின் மூலம் பாரேஸை பெறுகிறாள் அந்த பாரேஸ்பெற்ற வம்ஷா வழியில் ஏசுநாதர் பிறந்ததாக லூக்கா கூறுகிறார் அதன் பட்டியல் இதோ
23 இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானர் அவர் யோசோப்பின் குமாரனென்று என்னப்பட்டார், அந்த யோசேப்பு ஏலியாவின் குமாரன்; 24 ஏலி மாத்தின் குமாரன், லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசோப்பின் குமாரன்; 25 யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்; இந்த பட்டியலின் தொடர்ச்சியில் 33 நகசோன் அம்மினதாயின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன், லூக்கா அதிகாரம் 3 வசனம் 23 முதல் 38 வரை.
மேற்கண்ட வசனங்களை பைபிலில் படித்து பார்த்தால் தெரியும் மனிதர்கள் தங்களின் மனோ இசைவின்படி பைபிலை வடிவமைத்து விட்டு அது கர்தரின் வேதவரிகள் என்று மக்களை ஏமாற்றி வருவதை.
பைபில் வடிவமைக்கப்பட்டதே என்று K.J.V நிறுவனம் தரும் செய்தி எனக்கு ஆருதலயே எனது கட்டுரைக்கு தருகிறது
the new testament, which has a total of twenty seven book begins with the four gopels, which record the life and teachings of christ form four different view points althougt the original autograph no longer exist.
பைபிலை சில நல்ல கருத்தும் அதில் இருக்கவே செய்கிறது. இதை முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்...
0 கமென்ட் :
Post a Comment