ஜின்களை...


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

ஜின் எனும் படைப்பு, இந்த உலகத்தில் எத்தனையோ ஜீவராசிகளை படைத்துள்ள அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத படைப்புகளையும் படைத்துள்ளான். காற்று நெருப்பு நீர் மேகம் உயிர் இவைகளில் சிலதை உணரலாம். சிலதை உணரமுடியாது அப்படி மனித கண்ணுக்குத் தெரியாத ஒரு படைப்புதான் ஜின் என்பதாகும்.
 
இஸ்லாத்தின் மிக முக்கிய நம்பிக்கையில் ஒரு நம்பிக்கை. ஜின்களுக்கு இறைச் செய்தி அறிவித்து, அவர்களும் அல்லாஹ்வின் விலக்கள் ஏவல் கட்டளை உண்டு என்பதையும், அவர்களிலிலும் இறை அடிமைகளும் இறை நிறகரிப்பாளர்கள் உண்டு. என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் சேர்த்தே இறுதி தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவதாகும்.

 
இப்படி ஒரு படைபினம் இருப்பதை திருகுர் ஆன் கூறுகிறது. ஜின்களில் ஒரு கூட்டத்தார் (இந்தக் குர் ஆனை) செவியுற்று நாங்கள் ஆச்சரியமான குர் ஆனை செவியுற்றோம் எனக்கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என கூறுவீராக. அது நேர்வழியைக் காட்டுகிறது எனவே அதை நாங்கள் நம்பினோம் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம், குர் ஆன் 72:1,2, என அவர்களும் இந்த இஸ்லாமிய மார்கத்தை நெறியாக கொண்டிருக்கிறார்கள் என விளங்குகிறது.


இவ்வாறு ஒரு படைபினம் இருப்பதை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அறிய முடிகிறது. அது எவ்வாறு அறிய முடிகிறது என்பதே இந்தக் கட்டுரைக்கான ஆய்வு, தொழுகையில் புகுந்து நமது இபாதத்தை கெடுப்பற்கென்றே ஒரு இபுலீஸ் இருக்கிறான். அவன் பெயர் ஹின்ஸப் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ்ஸில் சொல்லப்படும் ஹின்ஸப் எனும் இபுலீஸை பார்க்க முடியாது. ஆனல் நம்மால் சில பரிசோதனையின் மூலம் உணரமுடியும்.


எவ்வாறு எனில் நாம் ஐந்து வேலைத் தொழுகையை ஒவ்வொறு நாளும் நிறைவேற்றுகிறோம். எதவது ஒரு தொழுகையில் நாம் எத்தனை ரக்காத்கள் தொழுதோம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். நமது ஆழ்மனதில் ஒவ்வொறு வக்த்துக்கும் இத்தனை இத்தனை ரக்காத்கள் என்று பதிவாகி இருக்கிற ஒரு இபாதத் செயல்பாடுகளில். நமது தொழுகையில் மட்டும் மறதி ஏற்படுகிறதே அது ஏன் என்று சிந்தித்தீர்கள் என்றால் விளங்கும். ஹின்ஸப் என்று ஒருவன் இருக்கிறான் என்று விளங்கும்.


எனெனில் நாம் தொழுகும் தொழுகைகளில் ரக்காத் என்னிக்கை நாளைத் தாண்டாது என்பது  இதில் கவணிக்க தக்க விசயம். அதிகமான என்னிக்கையில் நமக்கு சந்தேகம் வரலாம் ஆனல் சில வேலைகளில் இந்த சந்தேகம் பஜ்ர் தொழுகையில் கூட வந்து விடும். அது ஏன் என சிந்தித்தீர்கள் என்றால் விளங்கும் ஹின்ஸப் என்று ஒருவன் இருக்கிறான் என்று அறியலாம்.


ஹதிஸின் சுருக்கம், அப்போது (எலும்பும் கெட்டிச்சானமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்) அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும் என்னிடம் நஸ்பீன் என்னுமிடத்தை சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாக இருந்தன, அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான் (அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச்சானத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப்பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காக பிரார்த்தித்தேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூ குறைரா (ரலி) நூல் புகாரி 3860.


மேலே கூறப்பட்ட ஹதீஸை சில ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அனுகினால், ஜின் என்று ஒரு படைப்பு இருப்பதை உணரலாம். நான் எனது ஊரில் சில மாடுகள் காடுகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீடுகளுக்கு வரும். அவைகள் காடுகளில் மேயும்ம் பொழுது அவைகள் கழிக்கும் கெட்டியான சாணங்களை இரண்டு முன்று நாட்கள் சென்று பார்தால் அவை கெட்டியான சானம் போல் இருந்த்தாலும். கையில் எடுத்துப்பார்த்தால் சாணத்தின் கூடு மட்டும்தான் இருக்கும் அதற்க்கு உள்ளே ஒன்றும் இருக்காது.


உதரணத்திற்க்கு சொல்ல வேண்டுமானால் காடுகளில் வெட்டப்படும் மரங்களை சிலவேலைகளில் விட்டு வைத்திருப்பார்கள் அது மரம் போல் காட்சி அளித்தாலும். அவைகள் வெரும் கூடாகவே நிற்கும் சும்ம அதை தள்ளிவிட்டாளே போதும் கிழே விழுதுவிடும். கம்பீரமாக வெளித் தோற்றத்தில் தெரியும் மரம் ஏன் இவ்வாறு விழுகிறது என்றால். அவைகளை செல்லரித்து விட்டது என்று கூறுவார்கள் இவ்வாறே சாணமும் செல்லரித்து இருப்பதை அறியலாம்.


இவ்வாறே நாம் எலும்புகளையும் ஆய்வு செய்யலாம் மாவீரன் திப்பு சுல்தான் பயன்படுத்திய, குதிரையின் எலும்புகள் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனல் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கிலே உலகில் மாமிசங்கள் உண்ணப் படுகின்றன. அதில் இருந்து கலிக்கப்படும் அந்த எலும்புகள் எல்லாம் முறையாக புதைக்கப்பட விட்டாலும், அவைகள் எல்லாம் எப்படி மக்கிப்போய் விடுகின்ற!.

கடந்த வருட குர்பானி கொடுக்கப்பட்ட பிரானிகளின் எலும்புகள் எதவது செல்லரிக்கமல் விடப்பட்டுள்ளதா. என ஊரின் அனைத்து குப்பை தொட்டிகளையும் சுற்றிப்பார்த்து விட்டு வந்து விட்டேன், ஒரு எலும்பையும் காணவில்லை. அப்படியும் கிடைத்த சில எலும்புகளை எடுத்து தரையில் தட்டினேன், அப்படியே மாவு மாதிரி ஆகிவிட்டது இதில் இருந்து எனக்குத் தெரிகிறது அதை யாரே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று.
 
இல்லை என்றால் என்றோ இறந்து போன மாவீரன் திப்புவின் குதிரையின் எலும்புகள் மட்டும் அப்படியே மக்கமல், அருங்காச்சியகத்தில் பாதுகாப்புடன் அதே உறுதியுடன் இன்றும் இருப்பது எப்படி, ஒரு பொருளை பயண்படுத்தினால் அதன் தன்மை உறுதி குறைந்து விடும் என்பது என்னவே உண்மைதான்.

 
சில ஹதிஸ்களை நாம் வாசிக்கும் போது, ஜின்கள் என்று ஒரு படைப்பு பல வடிவங்களில் நமக்கும் காட்சி தரலாம். ஆனல் அதை நாம் ஜின் தான் என்பதை ஊகிப்பது கடினமே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட (அப்தர் எனும்) பாம்பை கொல்லுங்கள் மேலும் (அது கடித்தால்) கண் பார்வையை போக்கி விடும் (மேலும்) கருவை சிதைத்து விடும். நூல் புகாரி 3310.
 
ஹதிஸ் சுருக்கம். பாம்புகளை கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்கள். என்று சொன்னேன் – வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்ல வேண்டாம் – என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகவும் (இருக்கலாம்). நூல் புகாரி 3299.படைத்தவனை அறிய அவனது படைப்புகளை பற்றி சிந்தித்தால் போதும்.



0 கமென்ட் :