படைத்தவனின் ஆற்றல்



ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

எனது கடைக்கு எதிரில் ஒரு அரசமரம் இருந்தது, அதில் ஒரு ஜோடி காக்கைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது!. (நிறைய இருந்தது நான் கவணிச்சது ஒன்னத்தான்)

ஒரு நாள் எனது பக்கத்து டீ கடையில் பண்ணு வாங்கிய சிறுவனிடம் பண்ணை பறித்துச் செல்லும் போது. விரட்டியதில் நிலை தடுமாறி பறந்த காக்கை! மாநகர பேருந்தில் அடிபட்டு கிழே விழுந்து விட்டது. பின்னால் வந்த வாகணம் ஏறி காக்கை உறுக்கு தெரியாமல் நசுங்கி விட்டது. எங்கங்கோ இருந்து வந்த பல காக்கைகள் ஒன்று கூடி வானத்தில் கூச்சல் போட்டு கத்தி விட்டு கலைந்து விட்டன!?.
அன்று மாலை கூட்டின் வெளியே ஒரே ஒரு காக்கை மட்டும் அமந்து இருந்தது!. நாம் இரவு பதினோரு மனிக்கு கடை அடைக்கும் வரை இது விழித்துள்ளதே! காலையில் எப்படி சீக்கிரமே விழித்து விடுகிறது! தூங்கும் போது தூக்கத்தில் கீழே விழாமல் எப்படி இருக்கிறது! என்று யோசித்துக் கொண்டு இருப்பேன்.
  சில நாட்களில் இருந்த ஒரு காக்கையும் காணவில்லை சரி அது எங்கேயோ போய் விட்டது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு இரண்டு மாதம் ஆகிய நிலையில் இரவு நன்றாக பெய்ந்த மழையில் காக்கை கட்டிய கூடு இரவு கீழே விழுந்திருக்கிறது. காலை 5 ½ மனிக்கு கடை திறக்க வந்த நான் உடனே கூட்டை எடுத்துப் பார்க்கிறேன் அதில் இருந்த ஒரு காக்கை இறந்து போய் அந்த கூட்டிலேயே இருந்தது உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்க்கு துக்கப் பட்டேன்!?.


இந்த உலகை அல்லாஹ் படைத்தது எதோ வீனுக்காகவும் விளையாட்டுக்காவும்,  என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு அல்ல வானத்திற்க்கும் பூமிக்கும் இடை பட்ட எதுவும் வீனுக்காக படைக்கப்பட வில்லை என்பது குர் ஆனின் கூற்று.

அல்லாஹ் தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் (அமைத்து) அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். அவனே இரவை, பகலையும் வசப்படுத்தித்தந்தான். நீங்கள் அவனிடம் கேட்கும் யாவற்றில் இருந்தும் அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணி முடியாது, குர் ஆன் 14:33.
எங்கள் வீட்டில் மாடு ஒன்று வைத்திருந்தோம் அதை சில பராமரிப்பு காரணங்களுக்காக வேறு ஒருவருக்கு விற்று விட்டோம்!. பிறந்தது முதல் எங்களிடம் வளர்ந்த அந்த மாடு. சில வேலை மேய்ச்சலுக்கு சென்று விட்டு எங்கள் வீடு வழியே அதை வாங்கியவர் வீட்டுக்குச் செல்லும்.

நம் வளர்த்த மாடு நமது வீதி வழியே செல்வதை பார்த்து விட்டு வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட. என் தங்கை நீண்ட தூரம் சென்ற மாட்டை அதன் பெயர் சொல்லி அழைத்ததும் அழைப்போசையை கேட்ட மாடு ஓடி வந்து ஸ்பரிசங்களை!பெற்று கொடுத்த தீவணத்தை சாப்பிட்டு விடை பெற்று விட்டது. // வளர்புக்கும் பரமரிபுக்கும்மான இடைவெளியை கற்றுதந்தது மாடு//

ஒரு நாள் இரவு சென்னை தேணம்பேட்டை டி. எம். எஸ். பஸ் ஸ்டாப் அருகில், இரவு இரண்டு மனி அளவில் வந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த மரங்களில் எதோ ஒன்றில் இருந்து கீழே விழுந்து விட்ட எதோ ஒரு பறவையின் குஞ்சு ஒன்று கிடந்தது. அப்படியே அதை விட்டு விட்டு வரமனமில்லாமல். அதை ஒரு குப்பை தொட்டியில் கிடந்த கேரி பேக் ஒன்றில் வைத்து கடைக்கு கொண்டு வந்து விட்டேன்.


இரண்டு மூன்று நாட்கள் அதை பரமரித்த பின்பு சற்று எழுந்து நின்றது. அது சிறிய பறவையின் குஞ்சியாக இருந்தாலும் பார்க்கவே கொஞ்சம் அருவருப்பாக இருந்ததால் அதை யாரும் தொடவே முன்வரவில்லை. நாட்கள், வாரங்களாக வாரங்கள் மாதங்களாக ஓடிக்கொண்டிருந்தது. சற்று அதற்க்கு முடிமுளைக்க ஆரம்பித்தது கொஞ்சம் நடமாட அரம்பித்தது.

நான்றாக சாப்பிடவும் ஆரம்பித்தது அது வளரும் வேளை அதை ஒரு கிளி என அறிந்து கொண்டேன் .என்னோடு ரொம்ப நெருக்கமாகி விட்ட. அதை மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்க ஆரம்பித்தேன் பின்புதான் தெரிந்தது. அது ஆஸ்திரோலியாவில் வாழும் ஒரு அபூர்வவகையான கிளி என்று சில வேலைகளில் கிளி வெளியே பறந்து செல்லும்.

 சில நாட்கள் இரண்டு முன்று நாட்கள் ஆகியும் வீடு திரும்பும். பறவைகளுக்கு சுதந்திரம் ரொம்ப முக்கியம் ஆச்சே, அதை பறவைகள் காப்பகத்தில் ஒப்படைத்து விடலாம் என கருதி அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். இரண்டு மூன்று மாதங்கள் ஆகிய நிலையில் ஒரு நாள் காலை கிளி வீட்டின் கூறையின் மேல் அமர்ந்து இருந்தது.

அதை அழைத்தேன் அருகே வந்தது அதை வாஞ்சையுடன் தடவி கொடுத்து விட்டு. காப்பகத்தாருக்கு போன் செய்து நான் கொடுத்த கிளி எங்கே என்றேன் அது பறந்து சென்று விட்டதாக கூறினார்கள், எங்கும் செல்லவில்லை என்னிடம்தான் வந்துள்ளது வாங்கிச் செல்லுங்கள் என்றேன். 


ஒவ்வொறு படைப்புகளும் ஒரு சமுதாயமாகவே திகழ்கின்றன. அவைகள் அவைகளை படைத்த பேரறிவாளான் அல்லாஹ் அவைகளுக்குச் செய்த  அருளை மனிதனுக்கு பறைசாற்றவே செய்கின்றான்
இவ்வாறே வவ்வால் பற்றி சிந்திப்போம், வவ்வால் பறக்கும் தன்மை கொண்டது என்பதால் அதை பறவை இணத்தில்தான் சேர்க்க வேண்டும் என்று ஒரு சாராரும். வவ்வால் பாலுட்டி இணம் என்பதால் அதை மிருக இணத்தில்தான் சேர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்களுக்குள்ளே கருத்து மோதல் உருவாகி வருகிறது. அவர்கள் எப்படியோ போகட்டும். வவ்வால் பற்றி நாம் என்ன கருதுகிறோம் என்றால்.

இருட்டில் வாழும் ஓர் உயிர் இணம் வவ்வால், பகலை எவ்வாறு அல்லாஹ் சில உயிரிணத்திற்கு வசப்படுத்தியுள்ளானோ அது போல் இருட்டையும் சில உயிரிணத்திற்கு வசப்படுத்தியுள்ளான், வவ்வால் ஒலி அலைக்களை உள்வாங்கி ஒலி அலைககளின் எதிரொலியை கிரகித்து. தனது பயணங்களைத் தொடரும், மனிதனைவிட ஒலி அலைகளை உள் வாங்கு பேராற்றல் கொண்டது கண்கள் இருந்தாலும் அதற்க்கு தேவையே இல்லை எனும் அளவிற்கு சக்தி கொண்ட உயிரி.

பாலுட்டும் இணம் என்பதால் மட்டும் வவ்வால் தனித்தன்மை உடையதள்ள. வவ்வால் வாயில்தான் தனது குட்டிகளை ஈன்றெடுக்கும். மரங்களில் அமரும் அளவிற்கு அதன்கால்களுக்கு சக்தியில்லை. அதனால் அதுமரங்களை பற்றிப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கும். இதனால். அது பிரசவத்தின் போது தனது வாயின் வழியாகவே ஈன்றெடுக்கும் அவ்வாறு பிரசவிக்கும் போது தனது குட்டி புவி ஈர்பு சக்தியால். பூமியை நோக்கி இழுபடும் தனது குட்டி பூமியின் தரயை வந்தடையும் முன் தாயே அதைவிட வேகமாக பறந்து வந்து தனது வாயில் குட்டியை கவ்விக் கொள்ளும்!.

இங்கு பரிணமம் குறித்து பேசுவோர் ஒப்பு நோக்க வேண்டு எதற்க்கான பறிணாமத்திற்கு வவ்வால்கள் தனது குட்டிகளை வாயில் ஈண்றெடுக்கின்றன. எந்தப் பரிணாம தத்துவத்தின் அடிப்படையில். பிறந்தது முதல் வளர்த்த வீட்டை விட்டு விட்டு தன்னை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறது மாடு. படைப்பிணங்களின் நுண்ணிய அறிவாற்றலை உற்று நோக்கும் போது. அதை படைத்தவனின் பேரரரிவாற்றலை உணரவும் அறியவும் முடிகிறது.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது அதை செவிதாழ்த்தி கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள், குர் ஆன் 22:73.
குர் ஆன் வசனத்தை கொஞ்சம் உங்கள் மனக் கண்முன் நிறுத்துங்கள். உங்கள் உணவில் வந்து அமரும் ஈ எதையாவது நம்மிடமிருந்து எடுத்துதான் செல்கின்றன. இல்லை என்று உங்களால் கூரவே முடியாது.

உதரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் இரவில் நம்மை வந்து கடிக்கும் கொசு. நம்மிடமிருந்து நம் ரத்தத்தை கொஞ்சம் எடுத்தே செல்கின்றன!? அதை நம்மால் ஒன்றும் பன்ன முடியாது அதை படைத்தவன் அதற்கு நுட்பமான அறிவை வழங்கி உள்ளான்.







0 கமென்ட் :