மோகினி ஆட்டம்


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

எனது மாமா ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். அப்படியே சென்றாலும் சரியாக ஒரு மாதம் கூட ஒரு கடையில் இருக்க மாட்டார் ஏன் என்று அவரிடம் கேட்டேன் தன்னை ஒரு மோகினி பிசாசு பிடித்து விட்டது என்று கூறினார்.

அவரை தஞ்சாவூரில் இருக்கும் ஒரு பேய் ஓட்டியிடம் அழைத்துச் சென்று அவரை பிடித்துள்ள மோகினியை அவரை விட்டு ஓட்டுவதற்கு கூட்டிச் சென்றார்கள். நானும் மோகினிப் பேய் ஓட்டுவதை பார்த்தது இல்லை என்று கூறி அவர்களுடன் தஞ்சாவூர் புறப்பட்டேன்.

தஞ்சாவூர் பேய் ஓட்டி கூறினார் ஒரு ஒத்தை பணைமரம் ஒன்று உங்கள் ஊரில் உள்ளது. அந்த மரத்தில் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் பெண்ணின் ஆவி ஒன்று குடியிருந்து வருகிறது. அந்த மோகினிதான் இவனை பிடித்துள்ளது என்று கூறினார். அந்த மோகினியை இவனை விட்டு எப்படி விரட்டுவது என்று கேட்டோம். பேய் ஓட்டிக் கூறினார் இவனை பிடித்துள்ள மோகினிக்கும் இவனுக்கும் முறைப்படி கல்யாணம் செய்ய வேண்டு. அப்படி செய்தால் இவனை விட்டு அந்த மோகினியை இவனை விட்டு விளக்கி விடலாம் என்றார்.

உடனே பேய் ஓட்டியின் ஆலோசனைப்படி இவனுக்கும் இவனை பிடித்துள்ள மோகினிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடனது. அதற்கு தேவையான பொருட்கள் எல்லால் வாங்கப்பட்டது. மோகினிக்கு புது புடவை இவனுக்கு சட்டை வேட்டி தாலி புது கல்யாணத்திற்கு புதுமணத்தம்பதிகளுக்கு என்ன என்ன பொருட்கள் வாங்குவார்களோ அத்தனையும் வாங்கினோம்.

சுமார் எட்டு ஆயிரம் மதிப்பு கொண்ட பொருட்கள் வாங்கப் பட்டு என் மாமாவிற்கும் அவனை பிடித்துள்ள மோகினிக்கும் திருமணம் செய்யப்பட்டது. ஒரு சின்னக் கல்யாண வைபோகமே நடந்தது. சுமார் அரை நாளில் முடிந்து விட்ட இந்த திருமணம் எந்தச் சிரமமும் இல்லாமல் நடந்து முடிந்ததது.

பேய் ஓட்டி அவருக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்டு திருமணத்திற்கு வாங்கிய பொருட்கள் தாலி உட்பட அனைத்தையும் ஒரு துணியில் மூட்டையாக கட்டி மோகினியின் புதுக் கணவணான என் மாமாவிடம் கொடுத்து உன் ஊருக்கு வெளியே இருக்கும் அந்த ஒத்தைப் பணைமரத்தின் கீழ் இந்த மூட்டையை தூக்கி வீசி விட்டு குளத்தில் குளித்து விட்டு அந்த ஈரத்தோடவே உன் வீட்டுக்குச் சென்று விடு என்று கூறினார்.

போய் ஓட்டி என் உம்மாம்மாவிடம் ஆறு மாதத்திற்குள் இவனுக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று கூறினார். நாங்கள் மோகினியின் புது மாப்பிள்ளையான என் மாமாவை அழைத்துக் கொண்டு. பட்டுக்கோட்டை வந்து இரவு பனிரெண்டுமனிக்கு ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் புறப்பட்டோம் அந்தப் பேருந்தில் வந்தால்தான். எஸ்.பி. பட்டினத்திற்கு நள்ளிரவு இரண்டு மனிக்கு வர முடியும். மோகினிக்கும் மாமாவிற்கும் திருமணம் முடிந்த பின்னர் மாமா யாரிடமும் பேசவில்லை.

பேருந்து நடத்துனரிடம் கூறி எங்கள் ஊருக்குள் பேருந்து நுழைய மூன்று மைல் தொலைவு இருக்கும் போதே என் மாமாவிற்கு துணையாக வர என்னையும் இறக்கி விட்டு விட்டார்கள். நள்ளிரவு நேரத்தில் நானும் மாமாவும் பேருந்தில் இருந்து இறங்கி பேய் ஓட்டி சொன்ன அந்த ஒத்தை பணைமரம் இருக்கும் திசையை நோக்கி நடந்தோம். மாமாவின் நடைக்கும் என் நடைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. மாமா ஒரு புயல் வேகத்தில் நடக்க ஆரம்பித்தார் அவர் பின்னால் என்னால் ஓடித்தான் வர முடிந்தது.

குறிப்பிட்ட அந்தப் பணைமரம் வந்த உடன் கையில் வைத்து இருந்த கல்யாண சாமன் மூட்டையை அந்த மரத்தின் அருகே வீசி விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார். நான் தான் திரும்பிப் பார்த்தேன் மூட்டை தூக்கி வீசப்பட்ட மரத்திற்கு முப்பது அடி தூரத்தில் இன்னொரு பணைமரம் இருந்தது.

உடனே மாமா ஊரின் நடுவே உள்ள குளத்தில் குளித்தார் குளித்து விட்டு வீடு நோக்கி நடந்தார். மாமாவை பத்திரமாக வீட்டில் விட்டு விட்டு. மாமா மூட்டையை தூக்கி வீசினாரே அந்த பனை மரத்திற்கு அருகே வந்தேன் மாமா தூக்கி வீசிய மூட்டையை காணவில்லை.

உடனே எங்கிருந்து வந்ததோ தெரிய வில்லை அத்தனை பயமும் என்னை ஆக்கிரமித்து கொண்டது. என்னை சுற்றி மோகினிகள் எல்லாம் நான் மூட்டை கிடைக்காமல் ஏமந்து நிற்பதை பார்த்து சிரிப்பதாக தோன்றியது. அதுக்காக சும்ம விட முடியுமா?. மோகினியின் கல்யாணதிற்கு தாலி உட்பட அனைத்து சாமான்களையும் நானும் சென்று அல்லவா வாங்கினேன்.

சுமர் அன்றைய மதிப்பில் ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள் அல்லவா அந்த மூட்டையில் உள்ளது. என் மனதே என்னை பயமுருத்திக் கொண்டிருந்தது. என் மனம் என்னை பயமுருத்தினாலும். என் அறிவு மூட்டையை தேடுவதில் முனைப்பு காட்டியது கடைசியா ஐந்து நிமிட தேடலுக்குப் பிறகு. மாமா மூட்டையை கொஞ்சம் வேகமாக தூக்கிப் வீசியெரிந்து இருக்கிறார், அதனால் கருவேல மர முள்களில் சிக்கி கொண்டு இருந்தது.


இது தெரியாமல் நான் தரையில் தேடிகொண்டு இருந்தேன். மூட்டைவேறு கலர் லுங்கியில் கட்டி இருந்தால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டு மூட்டையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்து விட்டேன். (ரொம்ப நாட்களாக என் அம்மாவிடம் இதை கூறவே இல்லை)

கொஞ்சம் நாள்களில் மாமாவிற்க்கு கல்யாணம்  நடந்து விட்டது. மாமாவிற்கு முன் பிறந்த பெரிய மாமா ஒரு வரும் அவரின் தங்கையும் இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் முன்பே மோகினி மாமா திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தந்தையாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார்.
சில வருடம் களித்து மாமாவின் குடும்பத்தினர் கஸ்டப்படுவதையும் மாமாவின் தங்கையை திருமணம் செய்து கொடுக்க அவர்கள் சமுக மக்களிடம் வசூல் செய்வதையும் மாமாவிடம் கூறினேன். மாமா எதோ எதோ கதைகள் சொன்னார். இறுதியாக மாமாவிடம் கூறினேன் மோகினி பிசாசு உங்களை பிடித்து விட்டது என்று நீங்கள் நாடகம் ஆடி உங்கள் குடும்பத்தர்கள் மூலமே அவர்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி  உங்கள் தேவைகளை பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றேன்.

நீன்தான் எனக்கு மோகினி பிடித்து இருக்கும் போது அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தாயே என்றார். அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் சீக்கிரம் கல்யாணம் செய்யச் சொன்னால் உனக்கு அண்ணண் இருக்கிறான் தங்கை இருக்கிறாள் என்று காரணம் கூறுவார்கள் என்று கருதி மோகினி நாடகம் நடத்தினீர்கள் என்றேன்.

நீ எப்போதுமே இப்படித்தான் எதையுமே நம்ப மாட்டாய் என்றார். உண்மையில் நம்பிதான் சொல்கிறேன் என்றேன். உங்களுக்கு மோகினியாக பிடித்து இருந்தது  இஸ்லாமிய மோகினி பிசாசு ஆனால் தஞ்சாவூர் பேய் ஓட்டி உங்களுக்கு தாலி கட்டித்தானே உங்களிடம் இருந்து மோகினியை உங்களை விட்டு விளக்கினார். எப்படி ஒரு முஸ்லிம் பெண்  மோகினிக்கு நீங்கள் தாலி கட்டலாம். நீங்கள் ஒரு பொம்மைக்கு தாலி கட்டியதுமே நீங்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டீர்கள் என்றேன்.

அது போல் மோகினிக்கும் உங்களுக்கும் திருமணம் முடிந்து இருக்கும் போது.  நீங்கள் எப்படி அந்தத் திருமணத்தை மறைத்து விட்டு இன்னொரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்யலாம் என்றேன். எங்கள் உரையாடலை மிக கவணமாக கவணித்து வந்த மாமாவின் இரண்டாவது சம்சாரம் மிகவும் துடித்துப் போய் விட்டார்.

அவர் மாமாவிடம் கேட்டார் நான் உங்களைப் போல். ஆண் மோகினி என்னைப் பிடித்து அதை விளக்க எனக்கு ஒரு திருமணம் நடந்து இருந்தால். என்னை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஏற்று இருப்பீர்களா  என்றார்!. மாமாவின் மனைவியின் கேள்வி பெண்கள் ஒரு சமுக மாற்றத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நிம்மதி அடைந்தேன்.

விடை பெரும்  தருனத்தின் போது  மாமாவின் மனைவி அன்று நீங்கள் மூட்டையில் இருந்து எடுத்த, மோகினியின் தங்க தாலி இருக்க பாக்கலாம் என்றார்...



0 கமென்ட் :