ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக
கடந்த சில வருடங்களுக்கு முன் ஒட்டு மொத்த உலக மக்களும் ஒரே நாளில் நோண்புப் பொருநாள் கொண்டாடினார்கள். மிகுந்த மன மகிள்ச்சி ஏற்பட்டது எனக்கு. உலகம் முழுதும் இந்த வருடம் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி விட்டார்கள். இனி வரும் காலம் இதுவே உலகம் முழுவதும் தொடரும் என்று நம்பினேன்.
ஆனால் அடுத்த இரண்டு மாதம் கழித்து வந்த ஹஜ்ஜிப் பெருநாளை இரண்டு தினங்கள் தமிழகத்தில் கொண்டாடினார்கள் அது எப்படி இரண்டு மாதத்திலேயே இரண்டு நாள் வித்தியாசப் படும் என்று எனக்கு தெரிந்த நன்பர்கள் சிலரிடம் கேட்டேன்.
நன்பர்கள் சிலறோடு நான் மார்க்கம் சம்பந்தமாக பல விசயங்களை பேசுவது உண்டு அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது, ஹிஜ்ரா கமிட்டி என்று ஒன்று செயல் பட்டு வருவதை அறிந்து கொண்டேன். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்னும் ஆவளோடு அவர்கள் சொல்லும் விசயங்களை அவர்களின் வீடியோ பதிவுகளின் மூலம் அறிந்து கொண்டேன்.
அவைகளை பற்றி நன்பர்களோடு பகிர்ந்து கொண்டேன் நன்பர்கள் என்னை விட்டு தூராமாகிப் போகிறார்கள்!. அப்படி என்னதான் சொல்கிறது ஹிஜ்ரா கமிட்டி என்று பார்ப்போம் உலகம் முழுவதும் ஓரே குர் ஆன். உலகம் முழுமைக்கும் ஓரே நபி என்னும் போது ஏன் ஒரே நாளில் பெருநாள் மட்டும் கொண்டாடக் கூடது என்று அவர்கள் கேட்கிறார்கள்.
அவர் இந்தக் கேள்வியோடு அவர்கள் உள்ளடக்கும் விசயங்கள் நிறைய அதை நம் வலைப்பூ வாசகர்களே பகிர்ந்து கொண்டால் என்ன என்பதே இந்தக் கட்டுரை, ஒரு விசயத்தை இங்கு ஒப்பு நோக்க வேண்டும் நாம் வாசிக்கும் சில தமிழ் மொழி பெயர்ப்பு குர் ஆனில். அரபி மொழியில் அல்லாஹ் அருளிய குர் ஆனை சுத்தமாக வார்த்தைக்கு வார்த்தை தமிழில் மொழி பெயர்க்க வில்லை.
உதரணத்திற்க்கு குர் ஆனில் “ரப்” என்று வரும் வார்த்தைக்கு அரபியில் என்ன அர்த்தம் என்றே தமிழில் மொழியாக்கம் செய்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக தமிழில் வந்த குர் ஆனின் மொழி பெயர்ப்புகள் எல்லாம் ஒன்றுதான் என்று கூறலாமே. இங்கு யாரும் அவ்வாறு கூறுவதை விரும்ப வில்லை.
இதில் இருந்து அறியலாம் மொழி பெயர்ப்பாளர் எந்தக் கொள்கையை சார்ந்து இருக்கிறாறோ, அந்த அந்த ஜமா அத்களின் கொள்கையின் அடிப்படையில் மொழி பெயர்ப்பும் விளக்கமும் அமைந்திருப்பதை அறியலாம்.
ஹிஜ்ரா கமிட்டி கட்டமைக்கும் உள்ளடக்க விசயங்களில் முதன்மையானது. நாளின் துவக்கம். நாளின் துவக்கம் எது என்பது பற்றி அவர்கள் எடுத்து வைக்கும் ஆதரங்களில் முதன்மையானது ஒரு நாளின் கடைசி தொழுகையாக வித்ர் தொழுகை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். வித்ர் தொழுகையுடன் ஒரு நாளினுடைய அனைத்து தொழுகையும் முடிந்து விடுகிறது. பின்பு பஜ்ர் தொடங்கி விடுகிறது அதை தொடர்ந்து சுபுஹை நாம் அடைகிறோம் அதனால் பஜ்ரில் இருந்தே நாளின் தொடக்கம் ஆரம்பம் என்பது முதல் வாதம்.
ஐந்து வேளைத் தொழுகையில் நடுத் தொழுகையாக அஸர் இருப்பதால், அஸருக்கு முந்தி பஜ்ர் மற்றும் லுஹர். அஸருக்கு பின்னர் ம்ஃக்ரிப் மற்றும் இஷா. ஆக இஷாவுக்கு பின் நாளின் கடைசி தொழுகையாக வித்ர் பின்பு பஜ்ர் நாளின் துவக்கம் பஜ்ரில் இருந்து ஆரம்பிக்கிறது.
அவர்கள் இதற்க்குள் கட்டமைக்கும் விசயங்கள் அனைத்தயும் பதிவின் உள்ளடக்க முடியாது. ஹிஜ்ரா கமிட்டி கட்டமைக்கும் இன்னொரு விசயம். ஒரே நாளில் உலகம் முழுதும் ஐந்து வேளைத் தொழுகையை தொழுகிறோம், அதே போன்று ஒரே நாளில் ஜும்மா தொழுகையையும் தொழுகிறோம். நம்மால் ஏன் ஒரே நாளில் பிறையை மட்டும் கணக்கிட முடியாது என்பதே.
உலகம் முழுமைக்கும் ஒரே குர் ஆன் அகில உலகத்திற்க்கும் ஒரே ஒரு தூதர், உலகம் அனைத்திற்க்கும் ஒரே நாளில் ஐவேளைத் தொழுகை அதை போன்றே ஜும்மா என்று கடைப்பிடிக்கும் போது ஏன் பெருநாள் மட்டும் கொண்டாட முடிய வில்லை. இதற்க்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் “பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்பதே.
திருக்குர் ஆன் போர் நிறுத்தம் செய்யச் சொல்லி நான்கு மதங்களை அல்லாஹ் கூறுகிறான். பார்க்க குர் ஆன் 9:5 இவ்வாறு போர் நிறுத்தம் செய்து இருக்கும். இரண்டு நாட்டில் ஒரு நாடு ஒரு நாள் முன்பும் அதோடு சண்டையிடும் மற்றொரு நாடு ஒரு நாள் பின்பும் பிறையை பார்க்கின்றன ஒரு நாள் முன்பே பிறையை பார்த்த நாடு பிறையை பார்க்காத நாட்டுடன் போர் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
திட்டமிட்டு போர் செய்தால் மட்டுமே பெரிய இழப்புகளை தவிர்க்க முடியும். நாளின் ஒவ்வொரு கணத்தையும் இரண்டு நாடும் மிகத்துள்ளியமாக அறிய வேண்டும் இல்லை பாதகமான முடிவை இரண்டில் ஒரு நாடு சந்தித்து விடும்.
சூரியனும் சந்திரனும் கணக்கின் படியே இயங்குகின்றன. குர் ஆன் 55:5 இதன் அடிப்படையில் சிந்தித்தோம் என்றால். நமது முடிவுகள் சரியாகி விடும் ஒப்பு நோக்க தமிழக முஸ்லிம் அறிஞர்கள் பலர் பல அமர்வுகளை பிறை விசயம் பற்றிப் பேசியாகி விட்டது. ஒன்று சரியான முடிவை நோக்கி பயணம் ஆக முடிய வில்லை, சரியான முடிவு காணமுடியாத விசயத்தை நம் மீது இஸ்லாம் கட்டமைத்திருக்காது.
எங்கே பிறை விசயத்தில் தவறு இருக்கும் என்றால் புரிந்து கொள்வதில் இருக்கலாம். ஒரு முடிவு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுக்கப் பட்டால் நிச்சயம் முடிவு எட்டப்பட்டே இருக்கும். முடிவு எடுக்கப் படமல் பல வருடங்களாக இழுத்துக் கொண்டே செல்கிறது என்றால் நிச்சயம் அறிஞர்கள் இடையே கருத்து மோதல்களும் புரிந்து கொள்வதில் தவறும் இருக்கலாம்.
வியப்புக்கு உரிய விசயம் ஒன்றும் காத்திருக்கிறது உலகில் உள்ள குவாலிஜீன்
மற்றும் டாங்கா என்ற இரு நாடுகளும். நாற்பத்து ஐந்து நிமிட இடைவெளி கொண்ட நாடுகள்,
சரியாக சொல்ல வேண்டும் என்றால், டாங்காவில் 2016 ஜனவரி மஃரிப் தொழுகை 7.00
மனிக்கு, அதே நேரம் குவாலிஜீன் நாட்டில் 6.15 மனிக்கு மஃரிப் தொழுகை நாள் டிசம்பர்
31.12.2015. யாரவது விளக்கம் சொல்லுங்க...
0 கமென்ட் :
Post a Comment