ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
குமுதம்
பத்திரிக்கையில் சத்குரு ஜாக்கி வாசுதேவ்
அவர்கள் சொர்க்கம்
உண்டா. என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது.
சொர்க்கம் என்பது பிறர் மீது
அன்பு செலுத்தி வாழ்வதே சொர்க்கம் என்று
பதில் அளித்தார்கள். ஒரு சமயத்தை கட்டமைக்கும்
ஒரு கொள்கைவாதியின் பதில் இவ்வாறு இருக்கிறது
என்றால்.
அதை விட ஒருபடி மேலே
போய் ஒரு சினிமா கவிஞன்
எழுதுகிறான். விண் சொர்க்கமே பொய்
பொய் என் ”சொர்க்கம்” நீயே
பெண்ணே என்று! சமயவாதிகளின் பதில்
கவிஞனின் கூற்றைப் போலவே அமைந்து விடுவதால்.
ஓர் இறைக் கொள்கை. மண்ணறை வாழ்வு. மறுமை விசாரணை!. சொர்க்க வாழ்வு. நரக வாழ்வு?. என்பது எல்லாம் வெறும் கட்டுக் கதை என்று பரிணாம தத்துவவாதிகளால் கடுமையாக விமர்சமனம் செய்யப் படுகிறது. மறுப்பு வாதம் கொண்டவர்கள் மறுப்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.
அவர்களே ஒரு கட்டுக்கதையை நம்மிடம் வெகுகாலமாக பதிவு செய்ய முற்படுகின்றனர். மனிதர் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதன் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.
மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி, உண்முக ஆய்வு, பிரச்சைனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனிதர்கள், கருவிகளை வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியதாக அமைந்தது. மனிதர்கள் உலகம் முழுதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்ந்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந் தொகையாக வாழ்கின்றனர்.
ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்டதொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சப்பியென்ஸ் சப்பியென்ஸ் என்னும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு. மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புக்கள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற, மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.
.
பரிணாமவாதிகளின் கண்ணித் திரையை திருக் குர் ஆன் மறுக்கிறது. மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்றவன் அல்ல மனிதன். உங்களைப் படைத்திருப்பதிலும். ஏனெய உயிரிணத்தை பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. குர் ஆன் 45:4.
அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான் பின்னர் அவனே மரணத்திற்கான காலக் கெடுவை நிர்ணயித்தான். குர் ஆன் 6:2, மேலும் வாசிக்க 3:59, 7:`12, 15:26, 17:61, 23:12, 32:7, 38:71, 49:13, 55:14,
குர் ஆனின் கூற்றை கொண்டு மனிதனின் பார்வையை மட்டும் நாம் சிந்திப்போம். ஒரு மனிதன் ஒரு பொருளைப் பார்த்தால் அதன் நிறத்தை மனிதனுடைய கண்களில் லென்ஸ் இருப்பதால். அந்த லென்ஸ்ஸில் பட்ட பிம்பங்கள் வண்ணங்களாக பிரதி பளிக்கின்றது. அதுவே நமக்கு கலர் காட்சிகளாக விரிகிறது.
ஆனால் ஒரு குரங்கோ அல்லது எனெய எந்த உயிர் இணமோ அதன் கண்களில் லென்ஸ் இல்லாத காரணத்தல் அதன் கண்களின் காட்சிகள் எல்லாம் கருப்பு வெள்ளையாகவே காட்சி தருகிறது. படைப்பினங்களின் கண்களில் இருந்தே மனிதன் ஒரு தனிப் படைபினம் என்று அறியலாம்.
இங்கு ஒரு விசயத்தை ஒப்பு நோக்குங்கள், ஒரு மனிதனிடம் பத்து ரூபாய் நோட்டையும் ஆயிரம் ரூபாய் நோட்டையும் கொடுங்கள். அவனுக்கு அதற்கான வித்தியாசம் தெரியும். அதே நோட்டுக்களை ஒரு கழுதையிடம் கொடுங்கள் அதை உடனே தின்று தீர்த்து விடும்.
இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் சில சர்கஸ் கூடரங்களில் உள்ள சில மிருகங்கள் அதனுடைய ரிங் மாஸ்டர். ஒரு அட்டையில் 40 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை முதலில் எடுத்து அந்த பிரானியின் முன் வைப்பார் பின்னர் 8 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை எடுத்து அதன் முன் வைப்பார் பின்னர் அந்தப் பிரானியை நோக்கி கட்டளை இடுவார். உடனே அது அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும் பலகைகளில் 48 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை எடுத்துக் கொண்டு வரும். உடனே கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.
ஆனால் இங்கு ஒப்பு நோக்க வேண்டிய விசயம் என்னவென்றால், முதலில் 8 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையையும் பின்னர் 40 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையையும் அந்தப் பிரானியின் முன் வைத்தால். நிச்சயமாக 48 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை தூக்கிக் கொண்டு வராது.
ஆனால் ஒரு மனிதன் எந்த என்களை எவ்வாறு மாற்றினாலும் அவன் கண்டுபிடித்து விடுவான். படிக்காதவன் கூட என்களையும் பணங்களையும் என்னுவதை அறியலாம் எனெனில் மனிதனுக்கு அவனைப் படைத்தவன் அவனுக்கு. (அனைத்துப் பெயர்களையும் (அல்லாஹ்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். குர் ஆன். 2:31.)
நாத்தீகவாதிகளே அல்லாஹ் என்ற ஒருவன் நிச்சம மனிதனுக்கு கற்றுக் கொடுக்க வில்லை என்று நீங்கள் மறுத்தால் பின்னூட்டம் இடுங்கள் பதில் அளிக்கிறேன்.
0 கமென்ட் :
Post a Comment