ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
மோசே
இவரை முஸ்லிம்கள் முஸா (அலை) என்று கூறுவார்கள். இவரை குழந்தையாக இருக்கும் போது இவரது எதிரியான ஃபிர் அவ்ன் என்பவன் எடுத்து வளர்த்தான். என்று திருக் குர் ஆன். 20:38;26:18;28:7-9;28:12-13; வசனங்கள் கூறுகிறது இவரிடம் அல்லாஹ் நேரடியாகவே பேசினான். 2:253;4:164;7:143-144; 19:52;20:11-24;27:9. என்று திருக்குர் ஆன் கூறுகிறது,
பாறையில் இவர் அடிக்க தண்ணீர் வந்தது. என்று திருக்குர் ஆன். 2:60;7:11. வசனங்கள் கூறுகிறது. கையில் பிரகாசம் வந்தது என்று திருக்குர் ஆன். 7:108;20:22;26:33;27:12;28:32;. வசனங்கள் கூறுகிறது. கைத்தடியால் கடலை பிளந்தார். என்று திருக்குர் ஆன். 20:77;26:63. வசனங்கள் கூறுகிறது. இவர் சூனியக்காரர்களுடன் போட்டியிட்டு வென்றார். என்று திருக்குர் ஆன். 7:110-132;10:79,81;20:58-73;26:37-50. வசனங்கள் கூறுகிறது. இவருக்கு எழுத்து வடிவில் வேதம் வழங்கப்பட்டது. என்று திருக்குர் ஆன். 7:45;7:150;7:154,. வசனங்கள் கூறுகிறது.
மூஸா (அலை)
முஸா (அலை) அவர்களை பைபில் மோசே என்று கூறுகிறது. இவர் இஸ்ர வேலர்களுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்ட. தீர்க்கதரிசி என்றும் கூறுகிறது. மோசே சில முன்னரிவிப்புகளை அறிவித்ததாக பைபில் கூறுகிறது.
மோசே பிதாக்களை நோக்கி உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பன்னுவார் அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லவற்றிலும் அவருக்கு செவிகொடுப்பீர்களாக. புனித பைபைலில் அப்போஸ்ததலர்.3:22
உன் தேவனாகிய கர்த்தர் என்னைபோல ஒரு தீர்க்கதரியை உனக்காக. உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பன்னுவார் அவருக்குச்செவி கொடுப்பீர்களாக. புனித பைபைலில் உபாகமம். 18:15
இதோடு அந்த முன்னரிவிப்பு நிறைவு பெற வில்லை முன்னுள்ள வசனங்களில் மோசே தீர்க்க தரிசனம் உரைக்கிறார். மோசேயை நோக்கி தேவனாகிய கர்த்தர் பின்வரும் வசனத்தில் கூறுவதாகவும் இடம் பெறுகிறது.
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பன்னி என் வார்த்தைகளை அவர்வாயில். அருள்வேன். நான் அவருக்குக் கற்ப்பிப்பதை எல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்வார்.
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என்வார்த்தைகளுக்குச் செவிகொடதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். கர்த்தர் சொல்லாத (வார்த்தை) இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்.
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை.புனித பைபைலில் உபாகமம். 18:18;19;21;22;
சமுவேல் முதற்கொண்டு எத்தனை பேர் தீர்க்க தரிசனம் உரைத்தார்களோ அத்தனை பேரும் இந்த நாட்களை முன்னரிவித்தார்கள். புனித பைபைலில் அப்போஸ்ததலர்.3:24
மேலே நான் குறிப்பிடும் வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத்தான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்கள் இயேசு நாதாரை குறிக்காது எனெனில் பைபிலே என்னுடைய கருத்தை வழுப்படுத்துவதாக வசனங்கள் இருக்கிறது.
அவர் (இயேசு) உங்களெல்லோரையும் உங்கள் பொல்லாங்குகளிரிருந்தும். விலக்கி உங்களை ஆசீர்வாதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி முதலாவது உங்களிடத்திற்க்கே அவரை அனுப்பினார். புனித பைபைலில் அப்போஸ்ததலர்.3:26.
இயேசு! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்று தீர்க்கதரிசி இல்லை என்றும். இயேசு கர்த்தரின் பிள்ளை என்றும் கூறுகிறது. கிருஸ்துவ சகோதரரர்கள் யாரும் இயேசுவை தீர்க்கதரிசி என்று கூறமாட்டார்கள். இயேசுவை கர்த்தரின் குமாரர் என்றே கிருஸ்வ சமுகம் முன்னிருத்துகிறது.
நான் கூறுவது ஆபிராகாமை போலோவோ, மோசையைப் போலோவோ சாமுவேலைப் போலோவோ, ஈசாக்கைப் போலோவோ யாக்கோபைப் போலோவோ. தீர்க்கதரிசியாக இயேசு இருக்க வில்லை எனெனில். புனித பைபைலில் அப்போஸ்ததலர்.3:12. வசனம் இஸ்ரவேலரை குறித்தே பேசுகிறது.
(இஸ்ரவேரே) அவர் (இயேசு) உங்களெல்லோரையும் உங்கள் பொல்லாங்குகளிரிருந்தும். விலக்கி உங்களை ஆசீர்வாதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி முதலாவது உங்களிடத்திற்க்கே அவரை அனுப்பினார். புனித பைபைலில் அப்போஸ்ததலர்.3:26.
நான் கூறுவது. மோசே கூறியது போல் உங்கள் சகோதரர் இனம் என்று கூற வில்லை என்பதே. சகோதரர் இனம் என்பது இஸ்ரவேலரை குறிக்காது. படியுங்கள் உபாகமம்.18:18; அப்போஸ்த்தலர்.3:22
இயேசுவை தீர்க்கதரிசி என்று பைபில் கூறினாலும், கிருஸ்துவ சமுகம் இயேசுவை பிதாவின் மகன் என்றே கூறி வருவதை அறியலாம்.
இயேசு இறைமகன் இல்லையா?. இயேசு கர்த்தரின் மறுவடிவம் என்றுதானே நாங்கள் அறிகிறோம். நீங்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்கிறீர்களே பைபில் இயேசுவை தீர்க்கதரிசி என்று கூறுகிறதா?.
யோவான்
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சி கொடுக்க சாட்சியாக வந்தான். புனித பைபைலில் யோவான். 1:6,7.
(இயேசு) அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார் அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. புனித பைபைலில் யோவான். 1:1.
இயேசு செய்த அற்புதத்தை கண்டு மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். புனித பைபைலில் யோவான். 6:14.
பரிசேயர் அவரை (இயேசுவை) நொக்கி உன்னைக் குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய் உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தமாக! என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையாக இருக்கிறது. ஏனெனில் நான் எங்கே இருந்து வந்தேனென்றும். எங்கேபோகிறேனென்றும். அறிந்திருக்கிறேன்.
நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேன் எங்கே போகிறேனென்றும் அறியீர்கள். நான் நியாயந்தீர்த்தால் என் தீர்ப்பு சத்தியத்தின் படியிருக்கும் ஏனெனில். நான் தனித்திருக்க வில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி. நான் போகிறேன் நீங்கள் என்னைதேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள் நான் போகிற இடத்துக்குவர உங்களால் கூடாது என்றார். புனித பைபைலில் யோவான். 8:13,14,16,21,
இயேசு தன்னை இறைமகனாக மேலே குறிப்பிட்ட வசனங்களில் ஒரு போதும் வாதிடவில்லை என்பதை வாசகர்கள் அறியலாம். மோசே சொன்னதீர்க்க தரிசனம் இயேசுவுக்கு பொருந்தாது என்பதையும் விளங்க முடிகிறது.
சமதானததை அல்ல?
மோசே உரைத்த தீர்க்க தரிசன முன்னரிவிப்பு இயேசுவுக்கு பொறுந்தாது என்பதை முன்னர் நான் விளக்கி இருந்தேன் கிருஸ்வ சகோதரர்கள் இயேசு நாதர் சமதானத்தை உலகில் போதிக்க வந்தாகவும் கூறி வருவதையும் அறியலாம்.
பூமியின் மேல் அக்கினியை போடவந்தேன் அது அப்பொழுதே பற்றி எரிய விரும்புகிறேன். நான் பூமியிலே சமதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ சமாதானத்தை அல்ல பிரிவினையை உண்டாக்க வந்தேன். என்று உங்களுக்கு சொல்கிறேன்.
எப்படி எனில் இது முதல் வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள். இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.
தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும். தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும். மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய் பிரிந்திருப்பார்கள். புனித பைபிலில் லூக்கா.12:49,51,52,53, மேலும் படிக்க மத்தேயூ.10:34,35
இஸ்ரவேலர் வீட்டார்
இஸ்ரவேலர் வீட்டார்களுக்கு மட்டுமே இயேசு நாதர் வந்தார் என்று பைபிலும் இயேசுவும் கூறுகிறார்கள்!. காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்க்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடி அல்ல என்றார். புனித பைபிலில் மத்தேயூ.15:24
இயேசுவின் சீடர்கள்
இயேசு தனது சீடர்களான பேதுரு, சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான், லெபேயு, யூதாஸ், கரிரியோத்து, அனுப்பும்போது. இடும் கட்டளை: இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில் அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்.
நீங்கள் புறஜாதியர் (gentiles) நாடுகளுக்குப் போகமலும் சமரியர் (samaritans) பட்டணங்களில் பிரேவேசியாமலும். காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டடாரிடத்துக்கு போங்கள். போகையில் பரலோக ராஜ்ஜியம் சமிபத்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். புனித பைபிலில் மத்தேயூ.10:5-7
இந்த வசனங்களும் மோசே சொன்ன முன்னரிவிப்போடு ஒத்துப்போக வில்லை ஏனெனில் பின்வரும் பைபில் வசனம் நமது கருத்தையே நிறுவுகிறது.
மோசே எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும் (ஃபிர் அவ்ன்) அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும். அவனுடைய தேசம் அனைத்திற்க்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும். அற்புதங்களையும்.
அவன் இஸ்ரவேலர் எல்லோருக்கும் பிரத்தியுத்தமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையு. மகாபயங்கரமான செய்கைகளையும். பார்த்தால். இஸ்ரவேலர் புத்திரர்கள் அவனுக்குக் கீழ்படிந்து கர்த்தர் மோசேக்குயிட்ட கட்டளையிட்டபடி செய்தார்கள்.
கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலர்களில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். புனித பைபிலில் யோசுவா. 34:9,10,11,12,
மோசே யோசுவாவின் சொல்லைக் கேட்டு நடக்கும்படி இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிடுகிறார். அதை அப்படியே. மோசே இல்லா விட்டாலும். கர்த்தர் மோசேக்குயிட்ட கட்டளையின்படி. இஸ்ரவேலர்கள் நடக்கிறார்கள்.
கடலை பிளந்தது.கர்த்தருடன் பேசுவது.பாறையில் தடியால் அடித்து தண்ணீர் வரவைப்பது. போர் செய்வது. சூனியக்காரர்களுடன் போட்டியிடு வெல்வது. மோசேயைப்போல் உடல் உறுதி கொள்கை முடிவு அவர்சீடர்கள் அவரை ஏற்று நடந்த விதம் அனைத்துமே. இயேசுவைக்குறிக்காது.
எனெனில் இயேசு அவருக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் சீடரே அவரை காட்டி கொடுத்து விடுகிறார். இதுவும் மோசேயோடும் அவரின் முன்னரிவிப்போடும் இயேசுவின் வாழ்வு பொருந்தவில்லை என்பதை அறியலாம்.
இயேசு இவரை. முஸ்லிம்களும். நபிகள் (ஸல்) அவர்களும். மஸிஹ் என்றும் ஈஸா (அலை) என்றும் கூறுவார்கள். இவர் அல்லாஹ்வின் ஆணைப்படி அண்ணை மர்யம் (அலை) அவர்களுக்கு தந்தையில்லமல் பிறந்தார்கள். மர்யம் (அலை) அவர்களின் இறை நம்பிக்கையாள் அல்லாஹ்வால் சிறப்பாக கவனிக்கப்பட்ட பெண்மனி. இவரை பற்றி பைபிலைவிட. திருக்குர் ஆனிலும். ஹதிஸ் நூல்களிலும். திருக்குர் ஆன் விளக்க நூல்களிலும். காணக்கிடைகிறது.
இயேசு நாதர் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெறும்போது. அவர்கள் கூறும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். அவர்கள் கூறும் பைபில் வசனங்களை. அடிப்படையாக கொண்டு நபிகள் நாயகள் (ஸல்) அவர்களின் வருகையை. இனி படிப்போம்.
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் போகிறது!. உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும் நான் போகாதிருந்தால் தேற்றவாளன் உங்கள்டத்தில் வாரார் நான் போவேனாயாகில் அவரை உங்களிடத்திற்க்கு அனுப்புவேன்.
அவர் வந்து பாவத்தை குறித்தும். நீதியைக் குறித்தும். நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாத படியினாலே. பாவத்தை குறித்தும். நீங்கள் இனி என்னைக் காணதபடிக்கு. நான் பிதாவினிடத்திற்க்குப் போகிறபடியினாலே.
நீதியைக் குறித்தும்!. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே. நியாயத்தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துவார்!. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிம்மைப்படுத்துவார். புனித பைபிலில். யோவான்.16:7-10,11,14
மேற்கண்ட பைபில் வசனங்கள் இயேசு நாதர் அவர்கள் இவ்வுலகத்தை விட்டு விடை பெறும்போது அவரை பின்பற்றியயவர்கள் எடுக்கவேண்டிய முடிவுகளையும். அவர்விடை பெற்றதும் அதை ஒட்டி நடக்கப்போகும் நிகழ்வையும் முன்னரிவிக்கிறார். நான் போனால் உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும். நான் போகமலிருந்தால் தேற்றவாளன் உங்களிடத்தில் வாரார். அவர் உலகத்தை கண்டித்து உணர்த்துவார்!
இயேசுவை அவர் சமுதாயத்து மக்கள் வரம்புமீறி புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்புமீறி புகழாதீர்கள். என்னை அல்லாஹ்வின் தூதர் எனவும் அவனின் அடிமை எனவும் கூறுங்கள் என கட்டளையே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பித்தார்கள். நூல். புஹாரி.
நல்லறங்கள். தீயறங்கள். அனைத்திற்க்கும் நியாயத்தீர்ப்பு நாளில்தான் கூலிவழங்கப்படும் என கூறினார்கள். அவர்களின் ஒவ்வொறு செயளும் நீயாயத்தீர்ப்பு நாளை நோக்கியே அமைந்திருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான். இயேசுவின் தூயமார்க்கத்தை முழுமைப்படுத்தினார்கள். என்பதைதான் வொவ்வொரு தலைப்பாக கண்டுவருகிறோம்.
இவ்வாறுதான் அரேபியாவில் ஒரு தீர்க்கதரிசி வரப்போகிறார் என்று நம்பிய வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் அரேபியாவை சுற்றி உள்ள பகுதிகளில் வந்து குடியேறினார்கள். இல்லையென்றால். அரேபியா பாலைவணத்தில் வந்து சிறுபான்மையினராக வாழவேண்டிய அவசியமே இல்லை. ஏன் என்றால். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் யூதர்களும், கிருஸ்துவர்களும் பேரரசுகளாகவும். குறுநிலை மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்தனர்.
அரேபியா பலைவெளியை பைபில் ஒதுக்கப்பட்டகல் என்று கூறிய பின்பும் அவர்கள் அரேபியாவில் குடியேறவேண்டிய அவசியம் என்ன? இயேசு அவர்களை நோக்கி வீடு கட்டுகிறவர்கள் ஆக தென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைகல்லாயிற்று அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?.
ஆகையால் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு. அதேற்கற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்கு கொடுக்கப்படும்!. இந்த கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான். இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப் போடும் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றார். இயேசு தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்கு பயந்திருந்தார்கள். புனித பைபிலில். மத்தேயு.21:42,43,44,46,
. வேததில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? என்று இயேசு கேட்கிறார். மோசேயின் வேதத்தில்தான் வாசிக்கவில்லையா என்பதைதான் அப்படி கேட்கிறார். இயேசுவின் வேதம்தான் காணாது போய்விட்டது என்று K.J.Vவெளியீடு பைபில் முன்னுரையில் மூண்றாம் பக்கத்தில் நூல் வரலாறில் கூறுகிறதே.
இயேசுவைக் கொல்லக்கூடிய அளவிற்க்கு அம்மக்கள் சென்றுவிட்டபோது. அவர்களைவிட்டு தேவனுடைய ராஜ்ஜியம் பிடுங்ககப்பட்டு. இஸ்ரவேலரின் சகோதர இணமான இஸ்மவேலரிடம் கொடுக்கப்படும் என்கிறது!. அதற்கேற்ற கனிதரும் இடம் அரேபியாதான். படியுங்கள். புனித பைபிலில். உபாகமம்.34:4.
இந்த கல்லின் மேல்விழுகிறவன் நொற்ங்கிப்போவான். என்றவசனத்தை இங்கு கவணிக்கவேண்டும். ஏற்க்கனவே வந்த கர்த்தரின் தீர்க்கதரிகள் பலரை கொண்றது போல் (கிருஸ்துவ நம்பிக்கையின் இயேசு உட்பட) வரக்கூடிய தேற்றவளனை கொல்ல முடியாது.
இது எவன்மேல் விழுமோ அவன் நொறுங்கிப்போவான். இந்த வசனத்தின் முன்னரிவிப்பின்படியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் தம் வாழ்நாளிலேயே தம் எதிரிகள் அனைவரையும் முறியடித்து கர்த்தரின் ராஜ்ஜியம் அமைத்து வெற்றிவாகை சூடினார்கள்.
இயேசு தீர்க்கதரிசி என்பதால் அவர்கூறுவதைக் கேட்ட மக்கள் பயந்திருந்தனர் கவனிக்கவேண்டிய வசனம் இது.
வீடு கட்டுகிறவர்கள் ஆகதென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லானது. அது கர்த்தராலே ஆயிற்று அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. புனித பைபிலில். சங்கிதம். 118:22,23
இதுவும் இயேசுவை குறித்து பேசாதவசனம். இயேசுவின் பிறப்பே அற்புதமானதாக இருக்கும் போது. வீடு கட்ட ஆகத கல்லாக இயேசு இருக்கமுடியாது.
இயேசுவே இதே வசனத்தை போதித்துயிருப்பதால்.பார்க்க மத்தேயு.21:42. தன்னைக்குறித்தே இப்படி ஒரு தீர்க்கதரிசனத்தை உரைத்திருக்கமுடியாது. கூறியிருக்கவும் மாட்டார்.சிந்தியுங்கள் சகோதரர்களே. தொடர்...
0 கமென்ட் :
Post a Comment