ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்திலிருந்து வசனங்களில் எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்த்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப்புஸ்தகத்தில் எலுதப்பட்டவைகளிருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்தும் போடுவார். புனித பைபிலில். வெளி. 22: 19. இந்த வசனம் கிருஸ்துவர்களின் செவிகளுக்கு போகவே இல்லை.
இயேசுவின் வம்ஷ வழி ஒரு குழப்பம்.
புனித பைபிலில். மத்தேயு. அதிகாரம்.1:1முதல்16 வரை. மத்தேயு குறிப்பிடும் இயேவின் வம்ஷ வழி தோன்றல்கள் வேறாகவும். புனித பைபிலில். லூக்கா. அதிகாரம்.3:23முதல் 31 வரை. லூக்கா குறிப்பிடும் இயேவின் வம்ஷ வழி தோன்றல்கள் வேறாகவும். இரண்டுபேறும் முரண்பட்ட இரண்டு கோனங்களில் இயேசுவின் வம்ஷவழியை பதிவு செய்கிறார்கள் . நம்பிக்கையையே தகர்த்து விடும் வகையில் இரண்டு கோனங்கள் ஏன் இதில் எது உண்மையானது.
இன்னொரு முரண்பாடன வசனத்தையும் உதரனமாக கூறலாம். நிறைய இருந்தாலும் சில வசனங்களை மட்டுமே எடுத்திருக்கிறேன். கர்த்தர் ஓய்வெடுத்தார் என்று. புனித பைபிலில். ஆதியாகமம். அதிகாரம். 22 வசனம். 2ல் கூறுகிறது. கர்த்தர் ஓய்வெடுக்க வில்லலை என்று. புனித பைபிலில். ஏசய்யா. அதிகாரம். 40:28. வசனம் கூறுகிறது. இதில் சரியாக இருக்கும். கர்தரால் அருளப்பட்டதோ. இயேவின் ஜீவ புஸ்த்தகமோ. நம்கையில் வைத்திருக்கும் பைபில் இல்லை என்ற முடிவுக்கே முரண்பாடுகள் கொண்டு செல்கிறது.
நாம் எவ்வாறு இருக்கக்கூடது என்பதையும் புனித பைபில் கட்டளையிடுகிறது. அவர்கள் கண்டும். காணாதவர்களாயும் கேட்டும் கேளாதவர்களாயும். உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியால். புனித பைபில். மத்தேயு. 13:13. இந்த வசனம் கூறும் மக்களாக நீங்களும் நானும் இருக்கக் கூடாது என்பதைதான். காய்த்தல். உவத்தல் இன்றி மேற்கோள் காட்டி சிந்திக்குமாறு கேட்கிறேன்.
புனிதர் தொடர்ச்சியில். ஆபிராகம், மோசே, ஈஸாக்கு, யாக்கோபு, இயேசு, என்று எலுதிக்கொண்டே செல்வது ஏன்? என்ற கேள்வி எலலாம். கிருஸ்த்துவ சகோதரர்கள். அறிந்து கொள்ளும் விதமாக. பைபில் கூறும் வரக்கூடிய தீர்க்கதரிசி யார் என்பதை கூறிவிட்டு. அவருக் கூறிய அடையளங்களில் ஒன்றையும் கூறிவிட்டு. புற்றியீசல்போல் தோன்றும் கல்லத்தீர்க்கதரிசிகளையும். அடையளம் காட்டுகிறது அதன் அடிப்படையிலேயே நமது இந்த ஆய்வுகட்டுரை தொடங்கப்பட்டது.
1. தீர்க்கத்தரிசியின் வார்த்தை எவ்வாறு இருக்கும்.
2. கல்லத்தீர்க்கதரிசியின் வார்த்தை எவ்வாறு இருக்கும்.
3. வரக்கூடிய தீர்க்கதரிசி என்னுடையதில் எடுத்து என்னை மகிமைப் படுத்துவார்.
4. அவர் மேல் விழும் எந்த கல்லும் நொறுங்கிப் போகும்
5. வரக்கூடிய தீர்க்கதரிசி நீதியைக் கைகொள்வார்!.
6. வரக்கூடிய தீர்க்கத்தரிசி நியாயத்தீர்ப்பு நாளைக்குறித்து கண்டித்து உணர்த்துவார். தீர்க்கதரிசியின் அளவுகோள்?
கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில். ஒருதீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாதவார்த்தை. உபாகமம்.18:21,22.
என்று பைபில் வசனம் கூறுகிறது. இதன் அடிப்படையில்தான் கர்த்தரின் இறுதி தூதர்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை இந்த கட்டுரையில் எலுதிவருகிறேன்.
இவ்வாராக அரேபியா எங்கும் ஒரு தீர்க்கதரிசி வரப்போகிறார் என்று மக்கள் நம்பிவந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு மட்டும் அரேபியாவில் இல்லையென்றால் அரேபியா மக்களின் வாழ்கையில் எழுச்சியென்பதே ஏற்ப்பட்டுயிருக்காது ஏன் என்றால் அரபு பேசும் மக்களைத் தவிர வேறுமொழிப்பேசும் மக்களை அவர்கள் நேசிப்பதுயில்லை!.
குர் ஆன் கூறும்போது இவர்கள் விளங்கவேண்டும் என்பதற்க்க்காவே! அரபு மொழியில் குர் ஆன் அருளப்பட்டதாக விளக்குகிறது. குர் ஆனை அரபு அல்லாத வேறு மொழியில் அருளியிருந்தால் யூதர்களும். கிருஸ்துவர்களும். அரேபியர்களும். நம்பியிருக்கவே மாட்டார்கள்!. என்று திருக்குர் ஆன் கூறுகிறது.
இந்த அரபு மொழியில்தான் இறைத்தூதர் வரவில்லை என்று குர் ஆன் கூறுகிறது. ஒரு முஸ்லிம் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் இறைத்தூதர்கள் வந்தார்கள் என்று நம்பவேண்டும்!.அல்லாஹ்வை வணங்குகள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள். என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். திருக்குர் ஆன்.16:36,
ஒவ்வொரு சமுதயத்திற்க்கும் ஒரு தூதர் உள்ளார் அவர்களின் தூதர் வந்ததும் அவர்களிடையே நீதியாகத் தீர்ப்பு வழங்கப்படும் அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள். திருக்குர் ஆன். 10:47
அல்லாஹ் எப்படி பேசுவான்
தன் தூதர்களிடம் அல்லாஹ் எப்படி பேசுவான். தனது தூதர்கள் மூலம் மனித சமுதயத்திற்க்கு அவனது கட்டளைகள் எவ்வாறு வந்து சேறும்? வஹியின் மூலமோ. திரைக்கப்பால் இருந்தோ. அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமே தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். திருக்குர் ஆன். 42:51.
தூதர்கள் அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா?. மோசே கர்த்தரை பார்த்தாக பைபில் கூறுகிறது சரியா?. அவனை கண்கள் பார்க்காது அவனோ கணகளைப் பார்க்கிறான் அவன் நுட்பமானவன் நன்கறிந்தவன். திருக்குர் ஆன். 6:103
இறைவனை நேரில் பார்க்கமுடியுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் அளிக்கும் விடை முடியாது என்பதுதான்.
அல்லாஹ்வை எந்த மனிதனோ, தூதர்களோ பார்த்தில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் திருக்குர் ஆன் கூறுகிறது. மறுமையில்தான் இறைவனைக் காணும் பாக்கியம். நல்லோருக்கு மட்டும் கிட்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடினார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை.
நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது. அவனே ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? எனக்கூறினார்கள். நூல்: முஸ்லிம் 261. இறைவனை நபி(ஸல்) அவர்கள் பார்த்ததில்லை. நூல் புஹாரி 3234,
மூஸா (அலை) அவர்களின் சமுகத்தவர்கள் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்டபோது. அவர்களை அல்லாஹ் இடியோசையினால் தாக்கினான் என்று திருக்குர் ஆன். 2:55;4:153,வசனங்கள் கூறுகின்றன. மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை. பார்க்க திருக்குர் ஆன். 7:143
நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு மோசேயை போன்றது. இயேசுவின் பிறப்பை போல தந்தையில்லாமல் அதிசயாமானது அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனையமனிதர்களைப்போல் சதரனமாகவே அவர்களின் வாழ்க்கைத்துவங்கியது. தந்தை அப்துல்லாஹ் தாயார் ஆமீனா இவர்களுக்கு ஒரே மகன் தான் முஹம்மது.
நபி (ஸல்) அவர்கள் தமது தாயரின் வயிற்றில் ஆறுமாத கருவாக இருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ் சிறியாவிற்க்கு வியாபரத்திற்க்கு சென்று விட்டு வரும் வழியில் யாத்திரிபில் நோய் ஏற்ப்பட்டு இறந்து விடுகிறார்கள். அப்துல்லாஹ் இறக்கும் போது பிறக்க போகும் தமது குழந்தைக்கும் தனது மனைவிக்கும் விற்றுச்சென்ற சொத்துக்கள் ஒரு ஒட்ட்கம் சில ஆடுகள் உம்மு ஐமன் என்னும் அடிமை பெண் மட்டுமே.
பிறந்த தனது பேரனுக்கு முஹம்மது என்று அப்துல் முத்தலிபு பெயரிட்டார்கள் (உலகில் இதுக்குமுன்புவரை இந்தப் பெயரை யாருக்கும் சூட்டவில்லை, என்று வரலாற்று ஆய்வாலர்கள் குறிப்பிடுகின்றனர்) தனது அன்பு மகனுக்கு ஆமினா அஹமது (பெரும் புகழுக்குறியவர்) அழைத்து வந்தார்கள்.
ஹவசின் குளத்தவர்கள்
ஹவசின் வகுப்பை சேர்ந்த பெண்கள் ஊதியத்திற்க்கு மக்காவை சுற்றி உள்ள பகுதியில் இருக்கும் சிறு குழந்தைகளை வங்கிச் சென்று பால் கொடுத்து வளர்க்கும் வழக்கமுடையவர்கள். இவர்களில் அன்னை ஹலிமா அஸ்ஸஃதிய்யா பின்து அபீதுஐப் அஸ்ஸ அத் பின் பக்ர் அவர்களும் அவரின் கணவர் ஹாரித் பின் அப்தில் உஸ்ஸாவுடன் வந்து பாலகர் முஹமதை வாங்கிச் சென்று வளர்த்து வந்தார்கள்.
இவ்வாராக அன்னை ஹலிமாவிடம் மூன்று வருடம் வளர்ந்தார்கள்; ஹலிமா ஆமினாவிடம் குழந்தையை கொடுக்க மக்கா வந்த போது மக்காவில் தொற்று நோய் ஒன்று பரவி இருந்தது அதனால் தொற்று நோய் பீதி முடிந்த பின்னர் குழந்தையை கொண்டு வந்து கொடுக்குமாறு ஹலிமாவிடம் ஆமினா கூறினார்கள்; இவ்வாராக ஹலிமாவிடம் ஐந்து ஆண்டுகள் குழந்தைப் பருவத்தில் நபி (ஸல்) வளர்ந்தார்கள் வளர்ப்புத்தாயார் ஹலிமாவின் நினைவுகள் என்றும் பசுமையாகவே நபி(ஸல்) அவர்களுக்கு இருந்தது.
கலப்பற்ற அரபு
ஹலிமா வாழ்ந்த ஹூனைன் பிரேதேச மக்கள் கலப்பற்றமுறையில் சுத்த அரபு பேசினார்கள்; இவர்களின் பேச்சு இனிமையாகவும்; எளிமையாகவும் திறமையாகவும்; செம்மையாகவும் இவர்கள் பேசும் அரபு இருக்கும்; குழந்தைப்பருவத்தில் ஐந்து ஆண்டுகள் பானுஅசத் வமிஷத்து மக்களிடையே வாழ்ந்த காரனத்தினால், எலுதப்படிக்க தெரியாத; நபி (ஸல்) அவர்கள் மக்கா வாழ் மக்களை விட மிகத்தெளிவாகவும்; செம்மையாகவும் திருத்தமாகவும்; அரபு பேசும் ஆற்றலை பெற்றிருந்தார்கள்! இஸ்லாம் அரபு நாடுகளில் பரவுவதற்க்கு நபி (ஸல்) அவர்கள் பெற்றிருந்த மொழிச்சிறப்பும் ஒருகாரணம்!.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் நான் பொருட்செறிவு விரிவாக விசயங்களை வெளியிடும் பேச்சுவண்மையுடன் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்; உங்களிடையே நான் மிகவும் அதிகமான நாவண்மையானவன். பிறப்பால் நான் குறைஷி எனது நாவு ஹவாஸின் கூட்டத்தரில் ஓர் உட்பிரிவான பானுஸ அதின் நாவாகும் எனக்கூறினார்கள்.
ஐந்து வயதில் ஹலிமா கொண்டுவந்து பாலகர் முஹமதை ஆமினாவிடம் ஒப்படைதார்கள்; தமது சொந்தங்களிடம் தனது மகனை காட்டிவர என்னிய ஆமினா தனது பனிப்பெண்ணின் துணையுடன் தனது மாமானாரிடம் கூறிவிட்டு யாத்திரிப் பயணமானர்கள்; யாத்திரிபில் சில காலம் தங்கிவிட்டு வரும் வழியில்; அபுவ என்ற சிற்றுரில் நோய்வாய்ப்பட்டு ஆமினா இறந்து போனார்.
தாயாரின் மறைவுக்குப் பிறகு தாத்தா அப்துல் முத்தலிபு வளர்த்து வந்தார்கள்; அவர் இறக்கும் தருவாயில் தனது மகன்களில் ஒருவரான அபுதாலிபிடம் நபி(ஸல்) அவர்களை ஒப்படைத்தார்கள்; அபுதாலிபின் மகன்கள்தான்; அலி(ரலி) ஜஃபர்(ரலி); அபுதாலிபு ஆற்றிய பனியைப்போல் நபி(ஸல்) அவர்களுக்கு ஹாசிம் கோத்திரத்தாரில் யாரும் பங்காற்றியது இல்லை.
அபுதாலிபு பெரும் வணிகராக இருந்தார்கள் அவருடன் சேர்ந்து வாலிப வயதில் சிரியாவிற்க்கு சென்று வியாபரத்தில் ஈடுபட்டார்கள். தமது பெரிய தந்தைக்கு சுமையாக இருக்கக்கூடது என்று ஆடு மேய்த்தார்கள்.
தனது வாலிப பருவத்தில். ஆடம்பரம்; வீன் பேச்சு; ஊர்வம்பு; வழக்காடுவது; பொய் சொல்வது; பிறருடைய பொருளை ஏமாற்றுவது என்று எந்தத்தீமையிலும் அவர்கள் ஈடுபட்டதுயில்லை; அப்படி அவர்கள் ஈடுபட்டு இருந்தால் பின்னாளில் தன்னை நபி என அவர்கள் கூறிய போது அது பற்றிய விமர்சனத்தயே. நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் அதைவைத்தே ஏகத்துவ பிரச்சாரத்தை முறியடித்திருப்பார்கள். அவர்களை விமர்ச்சனம் செய்தவர்கள் கூட நபி (ஸல்) அவர்களின் நற்பெயரில் ஒன்றான அல் அமீன் என்றே விமர்ச்சனம் செய்தார்கள்.
விளையாட்டு
வீன் விளையாட்டில் ஆர்வம் இல்லமல் போனாலும். நபி(ஸல்) அவர்கள் அம்பு எய்தல் ஓட்டப் பந்தாயம் மல்யுத்தம், தற்காப்பு கலை குதிரை சவாரி வாள் வீச்சு பொன்ற கலைகளை கற்றுத் தேர்ந்தார்கள். ”(முஹம்மதே) உமது இறைவன் உம்மைகைவிடவும் இல்லை இவ்வுலகைவிட மறுமையே உமக்குச் சிறந்தது (முஹம்மதே) உமது இறைவன் உமக்கு வழங்குவான் நீர் திருப்தியடைவீர் உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவனைக்க வில்லையா உம்மை வழி அறியாதவராக கண்டு வழி காட்டினான்; திருக்குர் ஆன்.93:3;7
தொடர்...
0 கமென்ட் :
Post a Comment