ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
நபி(ஸல்) அவர்களின் திருமணம் மக்காவில் பெரும் செல்வ சீமாட்டியாக திகழ்ந்த கதிஜா(ரலி) திருமணம் நடை பெற்றது. இதன் மூலம் ஜைனப், ருக்கையா, உம்மு குல்தூம், பாத்திமா, காஸிம், அப்துல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்தார்கள், இதில் ஆண்மக்கள் இருவரும் குழந்தைப்பருவதிலேயே இறந்து விட்டனர்.
சோதனை தவம் பிரபஞ்ச ஆராய்ச்சி இறைவனை அறியும் முயற்ச்சி விசயங்களில் ஈடுபடுவதற்க்கு, கதிஜா(ரலி)யின் செல்வம் சொளபாக்கிய நிலை உறுதுனையாக இருந்தது. அதை ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கினார்கள். இது நபி(ஸல்) அவர்களின் ஈகை குணத்தை வெளிச்சம் போட்டுகாட்டியது,
மாக்காவில் விக்ரக ஆரதனை செய்பவர்கள் ஒரு புரமும், விக்ரக வழிபாட்டை வெறுத்து இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை விளக்கம் காண பலர் முயன்று வந்தனர். இவர்களை ஹனீப்கள் என்று அழைக்கப்பற்று வந்தனர் இந்த ஹனீப்கள் ஒரே அமைப்பாக இல்லாமல் தனித்தனியா அவர்கள் ஒவ்வொருவர் ஆராய்ச்சிப்படி உண்மை மார்க்கத்தை கண்டரிவதில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய ஹனீப்களில் ஒருவராக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
விக்ரகங்களை வணங்கிவந்த அரேபியர்கள் அறியாமையிலும் ஓயாச் சண்டையிலும் ஒற்றுமை குழைந்தும் காணாப்பட்டு வந்தனர். கண்ணியம் கட்டுப்பாடு ஈகை குணம் அனாதையை அரவனைக்கும் பாங்கு அடிமைகளை விடுதலை செய்வதில் எடுத்துக்கொண்ட முனைப்பு. நிற்கதியாக நின்றவர்களுக்கு உதவிடும் மனபான்மையை பெற்றிருந்த நபி(ஸல்) அவர்கள், நேர்மை திறமை அறிவு ஊக்கம் இவற்றை மட்டும் துணையாக கொண்டு தீயவர்களை நல்லவர்களா ஆக்கிவிடுவது முடியாத காரியம் படைத்தவனின் அருளும் இதற்க்கு தேவை என உணர்ந்தார்கள்.
ஹீரா குகையில் தவம் ஹீரா குகையில் தனித்து தியானத்தில் மூழ்கினார்கள். (இந்த குகையில் நபி (ஸல்) அவர்களின் தாத்தா அப்துல் முத்தலிபும் தியானம் செய்த்தாக கூறுவார்கள்) இந்த இறைத்தேடல் தியானம் பல வருடங்களாக நீடித்தது. வஹி என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும் அல்லாஹ் தான் கூற விரும்பும் செய்தியை தனது அடியார்களுக்கு தெரிவித்தல் ஆகும்.
முதல் அருளுரை ரமலான் மாதம் கடைசி ஒற்றைடைகளில் ஒன்றில். ரமலான் மாதம் கடைசி ஒற்றைடைகளில் ஒன்றில் படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக, அவன் கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைதான், ஓதுவீராக உமது இறைவன் கண்ணியமானவன் அவனே எழுதுகோலால் கற்றுத்தந்தான், திருக்குர் ஆன் 96:1;5 வசனம் அருளப்பட்டது
திருக்குர் ஆனின் வசனத்தை வானவ தூதர் ஜிப்ரில் (அலை) ஓதுமாறு கூறிவுடன் எனக்கு ஓதத் தெரியாதே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறு மூன்று முறை நபி(ஸல்) அவர்களை ஜிப்ரில்(அலை) ஆரத்தழுவி ஓதுமாறு கூறிய உடன் நபி(ஸல்) ஓத ஆரம்பித்தார்கள், குர் ஆனின் வசனங்களை கல்பில் பதிந்து கொண்டு ஹீரா மலைகுகையை விட்டு வீடு நோக்கி நடந்தார்கள்.
போர்த்தி படுக்கவைத்து நடந்தவற்றை கேட்டரிந்தார்கள், 42:51 வசனம் கூறுவது போல் தனது தூதரிடம் வஹியின் மூலம் அல்லாஹ் தனது தூதரிடம் பேசினான், கதிஜா(ரலி) தனது பெரிய தந்தையின் மகன் வரக இப்னு நெளபல் யூத கிருஸ்துவ வேதங்களை கற்றிருந்தார் அவரிடம் நபி(ஸல்) அவர்களுக்கு ஹீரா குகையில் நடந்த விசாயங்களை, கதிஜா(ரலி) கூறினார்கள் கூறியதை கேட்ட நெளபலின் உள்ளத்தில்.
உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரிலிருந்து எழும்பப்பன்னி என் வார்த்தைகளை அவர்வாயில் அருளுவேன் நான் அவருக்குக் கற்ப்பிபதையெல்லாம் அவர்களுக்கு சொல்வார்ர், உபாகமம் 18:18
ஓதுவீராக என்னும் அத்திருவசனங்களை ஓதுமாறு கூறப்படும் காலை எனக்கு ஓதத்தெரியாதே எனக்கூறுவார், ஏசாயா, 29:12
கதிஜா(ரலி)யிடம் உனது கணவர் தீர்க்கதரிசிதான் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துவா என நெளபல் கூறினார்.
திருக்குர் ஆன் அருளப்பட்ட முதல் காலக்கட்டங்களில் அதிகம் வேதம் கொடுக்கப்பட்ட மக்களை நோக்கியே பேசுகிறது. எனெனில் முதலில் அருளப்பட்ட வசனமே எழுதுகோலால் எழுதக்கற்றுக்கொடுத்தான் என்று கூறுகிறது, முந்தைய சமுதாயமக்கள் தங்களுக்கு சாதகமாக தங்கள் வேதங்களை மாற்றி எழுதிக்கொண்டார்கள் என்று திருக்குர் ஆன், 2:75;79;, 3:78; 4:46; 5:13;41; 6:91, வசனங்கள் கூறுகிறது.
நபி(ஸல்) அவர்களுக்கு முதல் ஐந்து அருளுரை வசனங்கள் அருளப்பட்ட பின்பு தனது மேனியில் ஒரு போர்வையை போர்த்திக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள், ஹீரா குகையில் தம்மைவந்து சந்தித்த வானவதூதர் சில மாதங்கள் வரததைக்கண்டு அச்சமுற்றவர்களாக இருந்தார்கள்,
உமது இறைவன் உம்மை கலக்கமுற்றவராக கண்டு நபித்துவத்தை, அருளினான் இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர் பார்த்தவராக நீர் இருக்கவில்லை உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர இது
அருளப்படவில்லை, திருக்குர் ஆன், 28:86.
போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்வீராக உமது ஆடைகளை தூய்மைப்படுத்துவீராக அசுதத்தை வெறுப்பீராக மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்த்து உதவாதீர், திருக்குர் ஆன், 74:2; 45:6.
உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அல்லாஹ் அருளினான் நீர் அறியமல் இருந்ததை உமக்குக் கற்றுத்தந்தான் உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது, திருக்குர் ஆன்,4:113; வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதையும் நீர் அறிந்தவராக இருக்கவில்லை திருக்குர் ஆன், 42:52.
போர்த்திகொண்டிருப்பவரே இரவில் குறைவாகவான நேரம் தவிர நின்று வணங்குவீராக அதில் பாதியளவு அல்லது அதை சிறிதளவு குறைத்துக் கொள்வீராக அல்லது அதைவிட அதிகமாக்கி கொள்வீராக குர் ஆனை திருத்தமாக ஓதுவீராக உம்மீது கணமான சொல்லை நாம் போடுவோம் இரவில் எழுவது மிக்க உறுதியானதும் சொல்லை சீராக்குவதுமாகும், பகலில் உமக்கு நீண்டபணி உள்ளது உமது இறைவனின் பெயரை நினைப்பீராக, அவனிடம் முற்றிலும் சரணடைவீராக, திருக்குர் ஆன், 73:1.
பைபில் கர்த்தரை எவ்வாறு ஜெபம் பன்ன சொல்கிறது அவர் என்னுடையதில் எடுத்து என்னை மகிமைப் படுத்துவார், யோவான், 16:14; சோர்ந்து போகமல் எப்பொழுதும் கர்த்தை ஜெபம் பன்ன வேண்டும் என்பதை குறித்து இயேசு ஒரு கட்டளயிடுகிறார் படியுங்கள், லூக்கா, 18:1
கிருஸ்துவ சகோதரர்களே மேலே உள்ள பைபில் வசனம் கூறும் அடிப்படையில் உங்கள் வழிபாடுயிருக்கிறதா?. உலகில் வாழும் முஸ்லிம்களை பாருங்கள் தினமும் ஐந்து வேலையும் தூயகர்த்தரை அவர்கள் ஜெபிப்பதை உங்கள் அருகாமையில் உள்ள மஸ்ஜித்களில் பாருங்கள் சோர்ந்து போகமல் கர்த்தரை ஜெபிப்பார்கள்.
பைபில் முன்னரிவிப்பு செய்தது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைதான் என்பதை சிந்தித்து உணறுங்கள்.
முகிரா இப்னு ஷீஅபா(ரலி) என்ற நபித்தோழர் கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் தமது கால்கள் வீங்கும் அளவிற்க்குத் தொழுவார்கள், அவர்களிடம் ஏன் இவ்வளவு சிரமம் மேற்கொள்கிறீர்கள் உங்களுடைய முந்திய பிந்திய பாவங்களைதான் அல்லாஹ் மன்னித்து விட்டானே திருக்குர் ஆன், 48:1 வசனம் பற்றி கேட்டபோது அதற்க்காகவாவது ஒரு நன்றியுள்ள அடியானாக நான் இருக்கக் கூடாதா என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், இச் செய்தியை, புகாரி முஸ்லிம் திர்மிதி நஸயீ இப்னு மாஜா ஆகிய நபி வழி தொகுப்பில் படிக்கலாம்.
பகிரங்க அழைப்பு முஹமதே உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக, திருக்குர் ஆன், 26:214.
ஸாபா மலைகுன்றின் முகடு ஒன்றில் ஏறிமக்களை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். மக்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினார்கள், அவர்களை நோக்கி இந்த மலையின் பின்புரம் எதிரிபடை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா என்று கேட்டார்கள்?. மக்கள் அனைவரும் ஒருமித்து நீங்கள் அல் அமீன் (பொய் பேசாதவர்) என கூறினார்கள் அவ்வாரயின் நான் சொல்வதை கேளுங்கள் நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்? அவனுக்கு இணை கற்பித்து விக்ரகங்களை
வணங்கக் கூடாது எனவும் உங்களுக்கு எச்சரிகை செய்யுமாறு அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டுள்ளான் எனவே விக்ரக வணக்கத்தை விட்டு விட்டு. அல்லாஹ்வை வணங்க வேண்டும்மென எச்சரிக்கை விடுத்துள்ளேன் எனது வார்த்தையை புறந்தள்ளிவிட்டு இனியும் உங்களின் பளைய வழியில் சென்று கொண்டிருப்பீர்களாயின் நிச்சயமாக நீங்கள் இன்னல் இடையூருகளும் பெரிய இழப்பும் உங்களுக்கு நேருமென எச்சரிக்கவே உங்கள் அனைவரையும் அழைத்தேன் என கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூலஹப் தங்களை வீனுக்காக அழைத்து சிரமம் கொடுத்து மக்களை பீதியடை செய்தாக கூறி மண்னை வாரி தூற்றி விட்டு சென்றார். மக்களில் யாரும் நபி(ஸல்) அவர்களுக்கு ஆதரவளிப்போர் யாரும் அங்கு இல்லை
அவர்கள் கூறுவது உம்மைக் கவளையில் ஆழ்த்துவதை அறிவோம் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லைமாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர் திருக்குர் ஆன் 6:33;10:65.
அபூலஹபு பற்றி முன்னரிவிப்பு அபுலஹபுடைய இரு கைகளும் அழிந்தன அவனும் அழிந்தான் அவனது செல்வமும் அவன் செய்தவைகளும் அவனை காக்கவில்லை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள் அவள் கழுத்தில் முறுக்கேரிய ஈச்சமரக் கயிரு உள்ளது திருக்குர் ஆன்,111:1
அபுலஹப் இவர் மகன்களுக்குதான் தனது இரு புதல்விகளையும் நபி(ஸல்) திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள், தம்மை இறைத்தூதர் என அவர்கள் அறிவித்தபோது. அபுலஹபு தனது மகன்களான உத்பா உதைபா இருவரையும் உம்மு குல்தும் (ரலி) ருக்கையா (ரலி) இருவரையும் விவகரத்து செய்யும்படி கூறினார். அதன்படியே விவாகரத்து செய்து அனுப்பி விட்டனர், அபுலஹபும் அவர் மனைவி உம்மு ஜமிலும் நபி(ஸல்) அவர்களை எதிர்ப்பதிலேயே பெரும் முனைப்பு காட்டிவந்தனர்.
நபி(ஸல்) அவர்களை பொய்யரென நிறும்பிக்க திருகுர் ஆன் 111 அத்தியாயத்தை முறியடிக்க அபுலஹபு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக நடித்திருந்தாலும். நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் இல்லையென்பதை நிறும்பித்து இருக்கலாம்!? கடைசிவரை இறைமறுப்பாளராவே அபுலஹபு வாழ்வு அமைந்து விடுகிறது’ இதை ஆய்வு செய்த இந்த நூற்றண்டை சேர்ந்த கேரிமில்லர் என்ற பாதிரியார் இஸ்லாத்தை ஏற்று தற்போது அப்துல் அஹமது உமர் என்ற பெயரில் மிகப்பெரிய ஆய்வரங்கங்களை நடத்திவருவதை நாம் அறியளாம்.
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறமலும் போனால். அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. உபாகமம்.18:22.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுருத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும் குருடர்களாகவும் விழமாட்டார்கள் திருக்குர் ஆன் 25:73.
இறுதி தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னர் யாரையும் முஸ்லிம்கள் தூதராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அதர்கான விடையையையும் பைபில் கூறுகிறது.
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. உபாகமம்.18:22.
இந்த வசனத்தை நன்கு ஆய்வு செய்யுங்கள் நபி(ஸல்) அவர்கள் கர்த்தரின் நாமத்தினாலே சொல்லிய அனைத்து முன்னரிவிப்புகளும் நிறைவேறி வருவதை நீங்கள் அறியலாம். கல்லதீர்க்கதரிசி யார் அவர்கள் தன்மை என்ன அவர்களின் மறுமை வாழ்வு எவ்வாறு இருக்கும் என்று பைபில் பின்வருமாரு கூறுகிறது.
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா என்பார்கள் மத்தேயு 7:22.
அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறிய வில்லை அக்கிராமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்,மத்தேயு, 8:23; நான் தனித்து இருக்க வில்லை நான் நியாயந்தீர்க்க முடியாது என்னோட பிதா தீர்பு வழங்குவார் யோவான் 8:16.
கர்த்தர் வேறு இயேசு வேறு என்பதை அழுத்தமாக பைபிலில் இருந்து மேற்கோள் காட்ட இந்த வசனத்தை தவிர முடியாது, கல்ல தீர்க்கதரிசிகள்தான் எல்லாம் வல்ல கர்த்தரை மக்கள் வழிபட தடுக்கிறார்கள் அவர்களை இணம் காணுவது நமது கடையாகும் கல்லத்தீர்க்கதரிசிகள் பின்வரும் பைபில் வசனத்தை காட்டி நமமை திசை திருப்ப கல்ல தீர்க்கதரிகள் நினைக்கலாம்?.
அபோஸ்தலர் கர்த்தரை நோக்கி எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பன்ன வேண்டும் என்றார்கள் அதற்க்கு கர்த்தர் கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால் நீங்கள் இந்தக்கட்டாத்தி மரத்தை நோக்கி நீவேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல் அது உங்களுக்குக் கீழ்படியும் லுக்கா 17:5
இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து கல்லதீர்க்கதரிசனம் உரைப்பவர்களை பரிசோதித்து இனம் காணலாம் யாரும் இதற்க்கு முன்வர மாட்டார்கள். ஆனால் பிறவி உமையை பேசவைக்கிறேன் பிறவிகுருடர்களை பார்க்க வைக்கிறேன் என்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்
2 கமென்ட் :
அருமையான பதிவு
அருமையான பதிவு
Post a Comment