ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
இயேசுவை பற்றி
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எத்தனையோ முன்னரிவிப்புகளை கூறினார்கள் அது அவர்கள் வாழும் காலத்தில் நிறைவேறியது. அவர்களின் தோழர்கள் காலதில் நிறைவேறியது தாபீஈன்கள் காலத்தில் நிறைவேறியது. தபாதாபீஈன்கள் காலத்தில் நிறைவேறியது. இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நபிகள் நாயகள்(ஸல்) அவர்களின் முன்னரிப்புகள் நிறைவேறி வருவதை உலகம் கண்டுவருகிறது.
இயேவை பற்றி இஸ்லாத்தின் நிலையென்ன? நாம் முந்திய தொடர்ச்சியில் கல்லதீர்க்கதரிகள் அவர்கள் செய்யும் சித்து வேலைகளுக்கு லுக்கா 17:5;6 வசனங்களை காட்டி கர்த்தரை மக்கள் வணங்குவதற்க்கு தடையாக இருக்கிறார்கள். அவர்களை இணம் காண வேண்டும் என்று கூறியிருந்தேன்.
எனெனில் பைபிலின் பின் வரும் வசனம் அவர்களுக்கு எதிராக இருக்கிறது.
மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் லுக்கா 17:30, மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறு திசைவரைக்கும் பிரகசிக் கிரதை போல மனுஷ குமாரனும் தம்முடை நாளிலே தோன்றுவார் லுக்கா 17:24. இந்த வசனத்தை படிக்கும் போது எல்லோரும் பார்ப்பதை போல மின்னல் தோன்றுகிறது ஆனால் கல்லதீர்க்கதரிகள் எல்லோரும் பார்ப்பதை போல எந்த அற்புதங்களையும் செய்ய முன்வருவது இல்லை?.
இயேசுவை பற்றிய முன்னரிவிப்பு
அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார் அதில் நீர் சந்தேகப்படதீர் என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி (எனக்கூறுவீராக), திருக்குர் ஆன் 43:61
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் எப்படி இறுதி நாளின் அடையாளமாக இருக்க முடியும்! என்று இங்கு கேள்விஎளலாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொருத்தவரையில் ஈஸா நபியை அவர்களை அவர்கள் எதிரிகள் கொல்லவில்லை ஈஸா நபி அவர்கள் இறக்கவுமில்லை
ஈஸா நபி அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள் ஆள்மாறட்டத்தில் அவர்கள் எதிரிகள் வேறொருவரைதான் கொலை செய்தார்கள்! என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகள் கூறுகின்றன.
ஈஸா நபியை அல்லாஹ்வின் வார்த்தையென்று, திருக்குர் ஆன் 33:39; 33:45; 4:171, ஈஸா நபியை அவனது உயிர் எனவும் திருக்குர் ஆன் 4:171;21:91;66:12 குறிப்பிடுகிறது இது போன்ற வார்த்தை பிரயோகங்களை தவராக விளங்கிக் கொண்டு ஈஸ நபி இறைவனின் குமாரர் என்று கிருஸ்துவர்கள் கூறுகின்றனர்
திருக்குர் ஆன் ஈஸா நபியோ மற்ற யாருமோ இறைவனுக்கு புதல்வராக இல்லை என ஏரளமான இடங்களில் பிரகடணம் செய்கிறது பார்க்க திருக்குர் ஆன் 2:116; 4:171; 10:68; 17:111; 18:4; 19:35;88;95; 21:26; 23:91; 25:2; 37:149;153; 39:43; 43:81.
அதிசய பிறப்பு
பொதுவாக மனிதர்கள் உருவாக பொண்னின் கருமுட்டையும் ஆணின் உயிரனுவும் அவசியம் ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரனு இல்லாமல் அல்லாஹ்வின் வார்த்தையால் உருவானார்கள் இதனால்தான் ஈஸா நபியை அல்லாஹ்வின் வார்த்தையென்று திருக்குர் ஆன் கூறுகிறது
இறைவனின் உயிர்
இறைவனின் உயிர் என்பதால் ஈஸா நபியை இறைவனின் புதல்வர் எனக் கூறமுடியாது இறைவனின் உயிர் என்றால் இறைவனுக்கு உடைமையான உயிர் என்றுதான் பொருள் அவனது ஒரு பகுதியான உயிர் என்று பொருள் இல்லை திருக்குர் ஆன் 15:29; 32:72; வசனங்கள் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உயிர் என்கிறது.
இதனால் கிருஸ்துவர்கள் யாரும் ஆதம் (அலை) அவர்களை இறைவனின் மகன் கூறுவதில்லை, ஆதம் (அலை) அவர்களை கூறும்போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அவ்வாறுதான் ஈஸா நபி பற்றியும் புரிந்து கொள்ளவேண்டும், ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது போல்தான் ஈஸா நபியையும் படைத்தது என்று திருக்குர் ஆன் 3:59,
வசனம் தெளிவாக கூறுகிறது.
மஸீஹ்
மஸீஹ் இது ஈஸா நபியின் மற்றொரு பெயர் யுகமுடிவு நாளின் கடைசியில் வரவிருக்கின்ற தஜ்ஜாலையும் நபி(ஸல்) அவர்கள் மஸீஹ் எனக் கூறியுள்ளார்கள் ஈஸா நபியைப் போலவே தஜ்ஜாலும் நீண்ட காலமாக உயிருடன் இருந்து வருகிறான்! மஸீஹ் என்ற அரபு சொல்லுக்கு தடவ பட்டவர் பார்வவையற்றவர் என்று பொருள் அர்த்தங்கள் உண்டு ஈஸா நபிக்கோ தஜ்ஜாலுக்கோ இவ் அர்தங்கள் பொருந்தாது மஸீஹ் என்பது இங்கு அரபு மொழிச் சொல்லின் பொருளில் பயன்படுத்த வில்லை நீண்ட காலமாக வாழ்பவரை மெஸாய என வேதமுடையோர் கூறிவந்தனர்.
உயர்த்தப்பட்ட ஈஸா நபி
அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொண்றோம் என்று அவர்கள் கூறியதாலும், அவரை அவர்கள் கொல்லவில்லை, அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர் ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். திருக்குர் ஆன் 4:157,158
உயர்த்திக் கொண்டான் என்ற சொல் அந்தஸ்து உயர்வைதான் குறிக்கும். என்று வாதிடுவர் இது தவராகும் அவரை உயர்த்திக்கொண்டான் என்று மட்டும் கூறினால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவவாது இடம் இருக்கும் ஆனால் தன்னளவில் என்பதையும் சேர்த்து கூறுவதால்.
அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை!”ரபஅ என்ற சொல்லுக்கு அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து பதவி புகழ் தகுதி என்பன போன்ற சொர்ககள் சேர்க்கப்பட வேண்டும். உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான் என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான் பார்க்க. திருக்குர் ஆன் 19:57 ஈஸா நபியை பற்றி கூறும் போது அவரையே உயர்த்தி கொண்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கொள்கை உறுதி
அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக அல்லாஹ் தேவையற்றவன் (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை அவனுக்கு நிகறாக யாரும்மில்லை திருக்குர் ஆன்,112; உமக்கு விளக்கம் வந்தபின்.
இது குறித்து உம்மிடம் விதண்டா வாதம் செய்தால் வருங்கள் எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம் நீங்களும் வருங்கள்! பின்னர் இறவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் எனக்கூறுவீராக. திருக்குர் ஆன் 13:61
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு பிள்ளைகள் இல்லை. அவனையும் யாரும் பெக்கவுமில்லை என்று இயேசு இறை மகன் என்று வதிடுபவர்களுக்கு இருந்த நம்பிக்கையைவிட அளவிடமுடியாத நம்பிக்கை அல்லாஹ்வுக்கு பிள்ளையில்லை என்பதில். நபி(ஸல்) அவர்களுக்கு இருந்தது. உங்கள் நம்பிக்கையில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால். வருங்கள் கர்த்தரிடம் சாப அழைப்பை வேண்டுவோம் என கர்த்தரின் நாமத்தினாலே கூறினார்கள் யாரும் நபி(ஸல்) அவர்களின் இந்த சவலை முறியடிக்க முடியவில்லை.
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, உபாகமம் 18:22. இதிலிருந்தே தெரியவில்லையா பைபில் முன்னரிவித்தது நபி(ஸல்) அவர்களைதான் என்று!.
கொல்லவே முடியாத தலைவர்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம்மை மனிதர்களால் கொல்லமுடியாது என்று முன்னரிவிப்பு செய்கிறார்கள் அது அப்படியே நிறைவேறியதை
இனிபடிப்போம்
தூதரே உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக (இதைச்) செய்ய வில்லையானால் அவனது தூதை நீர் எடுதுச்சொன்னவராக மாட்டீர் அல்லாஹ் உம்மை மனிதர்களிமிருந்து காப்பாற்றுவான் திருக்குர் ஆன் 5:67.
இந்த குர் ஆன் வசனம் அருளப்பட்ட உடன் ந(ஸல்) அவர்கள் தங்கியிருந்த கூடரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி (பாதுகாப்பு பணியில் இருந்த என்னை) மக்களே திரும்பிச்செல்லுங்கள் அல்லாஹ் என்னை நிச்சயமாக பாதுகாத்து விட்டான் என்று கூறினார்கள். திர்மிதி 3046.
புனித மரணத்தில் பேராவள் கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்க்கு அஞ்சாதவர்களாக இருந்தாலும் இறைவாக்கின் மீதுள்ள நம்பிக்கையில் மரணமெய்துவதர்க்குறிய வாய்ப்புகள் அதிகம் உள்ள இடத்தில்கூட எவ்வித பாதுகாப்புமின்றியிருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தமது வாளை மரத்தில் மாட்டிவிட்டு ஓய்வெடுத்தபோது
சிறிது நேரம் கழித்து மக்களை நபியவர்கள் அழைத்தார்கள் தன் அருகில் நின்றிருந்த கிராமவாசியை காட்டி இவர் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது.
(நான் மரத்தில் தொங்க விட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார் நான் கண் விழித்தபோது இவரது கையில் உரையிலிருந்துஉருவிய (எனது) வாள் இருந்தது இவர் என்னிடம் உன்னைக் காப்பாற்றுபவர் யார் என்று கேட்டார்.
நான் அல்லாஹ் என்று (மூண்று முறை) கூறினேன் உடனே அவர் வாளை உரையிலிட்டார் பிறகு அவர் அமர்ந்து கொண்டார் அது இவர்தான் என்று கூறினார்கள் பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் தண்டிக்காமல் மன்னித்து விட்டு விட்டார்கள் நூல் புகாரி, 2910; 2913; 4139.
விஷம்
யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தேய்க்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாகக் கொடுத்தால் நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் புகாரி 2617 எத்தனயோ வழிகளில் நபி(ஸல்) அவர்களை தீர்த்து கட்ட எதிரிகள் பல வழிகளில் முயற்ச்சித்தும் அவர்களை எதிரிகளால் ஒன்றும் செய்யமுடியடிவில்லை.
இங்கு பைபிலின் ஒருவசனத்தை ஒப்பு நோக்குங்கள்
இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொருங்கிப் போவான் இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் மத்தேயு21:44.
உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேக்கு அறிவித்தபோல மோசே மரிக்கிறபோது அவன் கண்கள் இருளடையவும்மில்லை அவன் பெலன் குறையவுமில்லலை. உபாககம், 34:7.
இந்த பைபில் வசனமும் இயேசுவுக்கு பொருந்தவில்லை எனெனில் கிருஸ்துவர்களின் நம்பிக்கைபடி அவர் எதிரிகள் சிலுவையி அறைந்து இயேசுவை கொண்று விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மட்டுமே மோசேயை போல இயற்கையாக மரனித்தார்கள்.
பூமி உருண்டை என்று முன்னரிவிப்பு
எந்தத்துறை நிபுனராக இருந்தாலும் அந்தத்துறையை பற்றி நுண்ணியமாக அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் நபி(ஸல்) அவர்களின் முன்னரிவிப்புகளை ஆய்வு செய்யும் நிபுனர்கள் எழுதப் படிக்க தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதனால் கூர்ந்து பார்க்கமுடித விஷயங்களை எல்லாம் எப்படி முன்னரிவிப்பு செய்தார்கள்.
அதுவும் பதினாலு நூற்றாண்டுகளுக்கு முன் உண்மையில் அது பற்றிய ஞானம் அது பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் அவருக்கு கூறியிருக்க வேண்டு. அல்லது அதைப்படத்தவன் அவருக்கு கூறியிருக்க வேண்டு என்று நமக்கு கூறுகிறார்கள். கர்த்தரின் நாமத்தினாலே அவர்கள் கூறியதை நமக்கு தெரிந்ததை பட்டியல் இடலாம்!.
இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 73:20
நவின வாகனங்கள் பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன 16:8
புவி ஈர்ப்பு சக்தி பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 13:20; 31:10
ஓரங்களில் குறைந்து
வரும் பூமி
என்று முன்னரிவிப்பு
திருக்குர் ஆன்
13:2; 31:29; 36:38
அனைத்திலும் ஜேடி
பூமி என்று
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 13:3; 20:53;36:36; 43:12;
51:49
சூரியனும் கோள்களும்
ஓடுகின்றன என்று
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 13:2; 31:29; 36:38
பூமியில்தான் வாழமுடியும் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 2:36; 7:24;25;
விண்வெளிப்பயணத்தில் இதயம் சுருங்கும் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 6:125;
வேதனயை உணரும் நரம்புகள் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 4:56
மனோதத்துவம் விளக்கம் பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 3:153;
திருப்பித்தரும் வானம்
பற்றிய முன்னரிவிப்பு
திருக்குர் ஆன்
86:11
முளைகளாக மலைகள்
ஊண்ட பட்டுயிருக்கின்றன
என்று முன்னரிவிப்பு
திருக்குர் ஆன்
13:3; 15:19; 16:5; 21:31; 27:61; 31:10; 41:10
பால் உற்பத்தியாகும் இடம் அது எவ்வாறு உற்பத்தியாகிறது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 16:66
பறவைகள் பூமியில் மோதமல் பறப்பது எப்படி காரணம் என்ன என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 16:79; 67:19
பூமி உருண்டை என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 18:90
பூமி தொட்டிலாக
அமைக்கப்பட்ட அற்புதம்
பற்றிய முன்னரிவிப்பு
திருக்குர் ஆன்
20:53; 43:10; 78:6
முன்பே அறிவித்த பெருவெடிப்புக் கொள்கை பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 21:30
முகடாக வானம்
என்று முன்னரிவிப்பு
திருக்குர் ஆன்
2:22; 21:32; 40:64;
கருவில் வளரும் குழந்தை மூண்று மாதம் கழித்தே மனித உருவம் பெரும் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 23:14
நிலதடி நீர் எவ்வாறு சேமிக்கபடுகிறது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 23:18
இருகடல்களுக்கிடையே தடுப்பு
உள்ளது என்று
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 25:53; 27:61; 35:12; 55:19
காற்றின் சரசரி
வேகம் என்ன
என்பது பற்றிய
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 34:12
வானங்களுக்கும் பூமிக்குமிடையே
ஈர்ப்பு சக்தி
உண்டென்று முன்னரிவிப்பு
திருக்குர் ஆன்
35:41
பூமி உருண்டை என்பதற்க்கு மற்றொரு சான்று என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 2:185; 7:137; 37:5;
55:17; 70:40
பெருவெடிப்புக்குப்பின் தூசு படலத்திலிருந்து கோள்கள் உருவாயின என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 41:11
மனிதர்கள் எடைக்கேற்ப்ப பூமியின் எடை குறையும் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 6:98; 50:4; 71:17
விண்வெளி பயணம் சாத்தியமே என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 41:11
விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 75:4
கலப்பு விந்தில்தான் மனிதன் உருவாகிறான் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 72:2;
தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 16:69
ஆழ்கடலிலும் அலைகள் உண்டு என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 24:40
ஆன்மீக பலம் என்றால் என்ன என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 3:61
கற்ப அறையின் தனித்தன்மை பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 13:8
கற்றிலும் மலடு உண்டு என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 51:41;42
அச்சம் தீரவழி என்ன என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 28:32
எதிர் எதிராக வீடுகளை அமைத்த சமுதாயம் பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 10:87
பூமியை பிளந்து மலைகளின் அளவு பூமிக்கு கீழே செல்ல முடியாது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 17:37
சூரியன் உதயமாகும் இடம் பற்றிய முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 18:90
மனிதன் பாலருந்தும்
பருவம் இரண்டு
ஆண்டுகள் என்று
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 31:14
பாதைகள் வானத்திற்க்கும்
உண்டு என்று
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 51:7
யுக முடிவு
நாளில் கடலில்
தீமூட்டப்படும் என்று
முன்னரிவிப்பு திருக்குர்
ஆன் 52:6
கற்ப்ப அறையில் உள்ள குழந்தைகளை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 53:33
சந்திரன் பிளந்து விட்டது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 54:1
ஜூதிமலை மீது சன்றாக விட்டுவைக்கப்பட்டு இருக்கிறது நோவாவின்
கப்பல் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 54:15
ஒலிகளை பயன்படுத்தி மனிதனை கொல்லமுடியும் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 54:31
சூரியன் உதிப்பது பல திசைகளில் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 55:17; 70:40; 37:57
வானத்தில் இருந்துதான் இரும்பு இறக்கப்படுகிறது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 57:25
ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபாடக தோன்றம் காணுவதற்க்கு அவன் மூக்கே முக்கிய காரனம் என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 68:16
மனிதன் கருவறக்கு செலுத்தும் விந்து எங்கிருந்து பாய்கிறது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 86:7
பகுத்தறிவு என்றால் என்ன என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 55:4
விளையும் உனவுதானியங்களை கெடமல் பாதுகாப்பது எப்படி என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 12:47
திருக்குர் ஆனைபோல் மனிதர்களால் இயற்ற முடியாது என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 2:23; 10:38; 17:88;
28:49;52:34; 11:13
திருக்குர் ஆனில் முரன்பாடுகள் இல்லை என்று முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 4:82; 41:42
தவ்ராத் வேதத்தை கொண்டுவருமாறு அறைகூவல் செய்தார்கள் (இன்னும் கொண்டுவர அவர்களால் முடியவில்லை) முன்னரிவிப்பு திருக்குர் ஆன் 3:93; 7:157; 48:29
கல்லதீர்க்கதரிகள்) அவர்கள் குர் ஆனை விட்டு தாமும் ஒதுங்கி கொண்டு மற்றவர்களையும் தடுக்கின்றனர் அவர்கள் தம்மையே அழித்துக் கொள்கின்றனர் (அதை) அவர்கள் உணர்வதில்லை, திருக்குர் ஆன் 6:26;
தெளிவான வசனங்களை உமக்கு அருளினோம் குற்றம் புரிநதொரைத்தவிர (யாரும் அதை) மறுக்க மாட்டார்கள் திருக்குர் ஆன் 2:99.
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவதுபோல் இவரை அறிவார்கள் அவர்களில் ஒருசாரர் அறிந்து கொண்டே உன்மையை மறைக்கின்றனர், திருக்குர் ஆன் 2:146
ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறமாலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை,உபாகமம் 18:22
நபி(ஸல்) அவர்களின் முன்னரிவிப்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யுங்கள் மோசே முன்னரிவித்த சுவிசேஷம் அப்படியே நபி(ஸல்) அவர்கள் வாழ்வோடு பொருந்திப்போவதை காணுங்கள் இந்த கட்டுரை பற்றிய உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்புங்கள். தொடர்
0 கமென்ட் :
Post a Comment