புனிதர்


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

றுதி தூதர் அரபு பேசும் இஸ்மவேல் இணத்தை தவிர வேறு எந்தமொழி பேசும் இணத்திலும் தீர்க்கதரிசி வரமாட்டார். என்பதை வேதம் கொடுக்கப்பட்டமக்களில் உள்ள அறிஞர்கள் அறிந்து வைத்திருந்தனர். எனெனில் அரேபியர் மட்டுமே இறைதூதர் அனுப்பப்படதா சமுதாயமாக இருந்தனர். அரேபியர்களின் வாழ்கை முறையை அறிந்தால் இதை நன்கு விளங்க முடியும் அதனால்தான் அவர்களின் அறியாமையை திருக்குர் ஆன் கூறும்போது.



இறைத்தூதர் அனுப்பப்படத சமுதாயம்
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடை நாமங்ளானது இஸமவேலுடைய மூத்த மகன் நெபாயோத் பின்பு கேதார் அத்தியேல் மீம்சாம் ஆதியாகமம் 25:13 இஸ்மவேலின் இரண்டாவது மகன் கேதார் அவரது வழித்தோன்றல்களும் அரேபியரும் கேதாரியார் என்று  அழைக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு ஏசாய என்னும் தீர்க்கதரிசி சில முன்னரிவிப்புகளை கூறுகிறார் பின்வரும் பைபில் வசனத்தில்

 

தீவுகளே அவைகளின் குடிகளே கர்த்தருக்கு புதுபாட்டைப்பாடுங்கள் பூமியின் கடையாந்திரத்திலிருந்து அவருடைய துதியைப்பாடுங்கள் கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது கண்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக ஏசாயா 42:10;11

கேதாரியார் வம்ஷமான குறைஸியரில் தீர்க்கதரிசி தோன்றும்போது. கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்கள். 

என்று முன்னரிவிப்பு செய்கிறார்.
எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது நாங்கள் அதைப்படிக்க தெரியாமல் இருந்தோம் என்றும் எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால். அவர்களைவிட நேர்வழி பெற்றிருப்போம் என்றும் நீங்கள் கூறாதிருப்பதர்க்காகவும் (இவ்வேதத்தை) அருளினோம். உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும் நேர்வ்ழியும் அருளும் வந்துவிட்டன திருக்குர் ஆன் 6:157; 32:33; 36:6

அவர்களில் இருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சிரியப்பட்டனர் இவர் பொய்யர் சூனியக்காரர் என்று மறுப்போர் கூறினர். கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கிவிட்டாரா இது வியப்பான செய்திதான். (முஹம்மதை விட்டும்) சென்று விடுங்கள் உங்கள் கடவுள்கள் விசயத்தில் உறுதியாக இருங்கள். இது எதொ எதிர்பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது என்று அவர்களின் பிரமுகர்கள் கூறினர் திருக்குர் ஆன் 38:4; 10:2



இப்படி எந்த எந்த வழிகளிலெல்லாம் ஏகத்துவ பிரச்சாரத்திற்க்கு தடை ஏற்ப்படுத்த முடியுமோ அந்தவழிகள் அனைத்தையும் பிரயோகித்தனர்

உமக்கு கட்டளையிட்டதை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக இணை கற்ப்பிப்போரைப் புறக்கனிப்பீராக கேலிசெய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம் திருக்குர் ஆன் 15:94



எகத்துவ பிரச்சாரம் பன்மடங்காக மக்காவை சுற்றியும் பரவியது. இணைவைப்பாளர்களின் பல்வேறு கேள்விகளும் தக்கபதில் கொடுக்கப்பட்டுகொண்டேயிருந்தது. மக்கா இணைவைப்பாளர்களின் எதிர்ப்பும் வழுவடைந்து கொண்டே வந்தது. மக்காவில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்ப்படுத்தப்படது. சிலரைதவிர மக்காவில் வாழவே முடியாத நிலை ஏற்ப்பட்டது.



எச்சரிக்கை செய்வோரில் (முஹமதே) நீர் ஆவதற்க்காக உமது உள்ளத்தி தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்கைகுறிய ரூஹ் (ஜிப்ரில்) இதை இறக்கினார் இது முன்னோர்களின் வேதங்களிலும் உள்ளது இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்து (ஏற்று) இருப்பது இவர்களுக்கு சான்றாக இல்லையா இதை (குர் ஆனை) அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி அவர் இவர்களுக்கு அதை ஓதிக்காட்டினாலும் அதை நம்பமாட்டார்க திருக்குர் ஆன் 26:193;199



அபிஸினியா பயணம்
நபி(ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் வந்து மக்காவில் நாங்கள் வாழ முடியாத நிலை ஏற்ப்பட்டு விட்டது. எங்கவது சென்று தலைமறைவாக சென்றுவிடலாம் என்று இருக்கிறோம் என்றார்கள். அவர்களின் வின்னப்பத்தை நபி(ஸல்) எற்று நீங்கள் சிறிது காலம் அபிஸீனியாவில் இருந்து வாருங்கள். அபிஸீனியா மன்னர் நஜ்ஜாஷி அஸ்மகம் இப்னு அப்ஹர் நற்குணமுடையவர் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் என்று கூறி அங்கு செல்ல அனுமதி தந்தார்கள்.
 


கி.பி 615 ரஜப் மாதம் ஹிஜாபா என்னும் துறைமுகத்திலிருந்து பதினோரு ஆண்களும் நான்கு பெண்களும் பயணமானர்கள். இதில் நபி(ஸல்) அவர்களின்அருமை மகள் ருகயா (ரலியும்) அவருடைய கணவர் உதுமான்(ரலியும்) இப்பயணகூட்டத்தில் இருந்தனர்.



முஸ்லிம்கள் நாடுதுறந்து அபிஸீனியா சென்றுவிட்டதை அறிந்து அவர்களை பிடித்து வர அம்ரிப்னு ஆஸ்,அப்துல்லாபின் அபிரபீஅ தலைமையில் குறைஸி படை ஒன்று அபிஸீனியா சென்று மன்னர் நஜ்ஜாஸியை சந்தித்து. எங்கள் நாட்டிலிருந்து எங்கள் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு புதிய மார்கத்தில் இணைந்து விட்டனர். அவர்கள் உங்கள் நாட்டில் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெரும் வெகுமதியான பொருட்களை நஜ்ஜாஸி முன் வைத்தனர். வாய்மொழி கேளாது தீர்பளிக்க முடியாது என்று கூறி முஸ்லிம்களை அழைத்து அவர்களின் தரப்பை விசரித்தார். முஸ்லிம்களின் தரப்பில் ஜஃபர்பின் அபுதாலிபு(ரலி) உரையாடினார்கள். வரலாற்று சிறப்பு மிக்க ஒரு உரையாடல்.



மன்னர் நஜ்ஜாஸி உங்கள் மார்க்கம் என்ன போதிக்கிறது?
ஜஃபர்(ரலி) பெரும் மதிப்பிற்குறிய அரசே நாங்கள் நாகரிகம் அற்ற சமுதாயமாக இருந்தோம். விக்ரகங்களை வணங்கி வந்தோம். பெண்களை போகப்பொருளாக கருதினோம் பாவித்தோம். பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்தோம்

சூதாட்டத்திலும் குடியிலும் மூழ்கிக்கிடந்தோம் விபச்சாரம் புரிந்து வந்தோம்அற்ப்ப விஷயத்திற்க்கு பூசலிலும் கைகளப்பிலும் ஈடுபட்டோம் இவ்வித சுபாவங்கள் எங்களிடம் மிகைத்திருந்தது

இந்த நிலையில் முஹமது(ஸல்) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினார்கள் ஒழுக்கச்சீலராகவும் காருண்யமிக்ககவராகவும் நற்குணமிக்கவராகவும்  வாழ்ந்து வருகிறார் நாற்பது வயதில் இறைவன் அவரை தூதராக அனுப்பியதாக கூறுகிறார் அவர்மூலம் புர்கான் என்ற வேதத்தை அருளிவருகிறான்.

அவ்வேதத்தின் அறப்போதனைப்படி நங்கள் அனுஷ்டித்து அனாச்சாரங்களை கைவிடச்செய்து நல்வழிபடுத்துகிறார் ஏக இறைவனை மட்டுமே வணங்கச்சொல்கிறார் மற்றயாருக்கும் சிறம் தாழ்த்தி வணங்ககூடாது எனச்சொல்கிறார்.

எங்களை ஒழுக்கப் பண்பாடு உடையவர்களாக மாற்றியமைத்து வருகிறார் அந்ததூதரை பின்பற்றும் முஸ்லிமான எங்களை சிலைகளை வணங்கக்கூடிய இவர்கள் சொல்லமுடியாத துண்பமும் கொடுமையும் செய்து வருகின்றனர் எனவே எங்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்கள்.

 தங்களிடம் எங்களை அனுப்பி அடைக்களம், தேடிக்கொள்ளுமாறு கூறி அனுப்பினார்கள். இந்த குறைஸியர்கள் யாருக்கும் நாங்கள் அடிமைப்பட்டவர்கள் இல்லை. பணத்தாளோ இரத்தத்தாளோ நாங்கள் கடன் பட்டவர்கள் அல்ல என உருக்கமுடன் எடுத்துச்சொன்னார்.



ஜஃபர்(ரலி)யின் சொல்லாற்றலும் விஷய விளக்கமும் மன்னர் நஜ்ஜாஸியை வெகுவாக கவர்ந்தது!. நஜ்ஜாஸி உங்கள் நபிக்கு அருளப்படும் குர் ஆன் வேதவசனங்களை ஓதிக்காண்பியும் என்றார் ஜஃபர்(ரலி) இனிய குரலில் திருக்குர் ஆனின் 19 வது அத்தியாத்தை ஓதிக்காண்பித்தார். திருக்குர் ஆனின் அருள்வசனங்களை கேட்ட மன்னரும் அவையில் உள்ளோரும் கண்ணீர் விட்டு அழுதனர்.



மன்னர் நஜ்ஜாஸி குறைஸியர்களைப்பார்த்து முஸ்லிம்களை உங்களோடு அனுப்பமுடியாது நீங்கள் உங்கள் வெகுமதிப்பொருட்களை எடுத்துக்கொண்டு உங்கள் நாடு திரும்பளாம் என்று கூறினார். மறுநாள் அம்ருப்னுல் ஆஸ் மன்னர் நஜ்ஜாஸியிடம் முஸ்லிம்கள் இயேசுவை சாதாரன மனிதப்பிறவி என்கின்றனர் என்றுகூறி கலக மூட்டினார்.

நஜ்ஜாஸி ஜஃபர்(ரலி)யை அழைத்துவரச்செய்து இதுபற்றி வினவினார். ஜஃபர்(ரலி) எங்கள் நபி முஹமது (ஸல்) அவர்களுக்கு ஏக இறைவனால் அறிவிக்கப்பட்டதின்படி நாங்கள் இயேசுவை இறைவனின் அடியார் என்றும். அவனின் தூதர் என்றும் அவனது உயிர் என்றும். அவனது வார்த்தையாகவும் கண்ணி மர்யம் (அலை) அவர்களின் கற்பத்தில் இறைஆணைப்படி இடம் பெற்றார் என்றும் நங்கள் விசுவாசிக்கிறோம். என்று கூறினார்.

அதன் பின்னர் அம்ருப்னுல் ஆஸ்சும் அப்துல்லா பின் அபீரபீவும் தோல்வியோடு மக்கா திரும்பினார்கள்.



மன்னர் நஜ்ஜாஸி, தினமும் ஜஃபர்(ரலி)யை சந்த்தித்து நபி (ஸல்) அவர்கள் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் கேட்டறிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் ஹிஜ்ரி 9 ம் ஆண்டு நபி(ஸல்) அவர்களை சந்திக்க மதினாவுக்கு கப்பலில் பயணமானர்கள். வரும் வழியில் கடல்புயலில் சிக்கி கப்பல் உடைந்து நீரில் மூழ்கி நஜ்ஜாஸி அஸ்மகம் இப்னு அப்ஹர் இறந்து போனார்கள்.

நஜ்ஜாஸி இறந்து போனதை சொல்லிக்காட்டி உங்கள் தோழர் நஜ்ஜாஸி இறந்து விட்டார் அவருக்காக ஜனாஸ தொழுகை தொழுங்கள் என்று கூறி நபி(ஸல்) தொழுவித்தார்கள். நஜ்ஜாஸி இறந்த்த செய்தி மதினா வரும் முன்பே அவருக்காக தொழுத்தது அன்றைய மக்களுக்கு இது வியப்பான செய்தி இம்முன்னரிப்பு அப்படியே நடந்தேறியது 

நபி(ஸல்) அவர்களின் சிலவரலாறுகளை பதிவு செய்யும் போது. நற்குணமிக்க கிருஸ்துராக இருந்து தனது நம்பிக்கையால் முஸ்லீமாகி முஸ்லீம்கள் மத்தியில் நீங்காது இதயத்தில் இடம்பிடித்துவிட்டார். மன்னர் நஜ்ஜாஸி மறுமையில் அவரை சந்திக்கும் பாக்கியத்தை அல்லாஹ் அருளட்டும்.

இது விளங்கிக்கொள்ளும் சமுதாயத்திற்க்காக வசனங்கள் தெளிவு படுத்தப் பட்ட வேதம் அரபு மொழியில் அமைந்த குர் ஆன் 41:3

எங்கள் இறைவா நீ அருளியதை நம்பினோம் இத்தூதரை பின்பற்றினோம் எங்களை இதற்க்கு சாட்சிகளாகப் பதிவு செய்துகொள் எனவும் கூறினர். குர் ஆன் 3:53

குர் ஆனை அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி அவர் இவர்களுக்கு அதை ஓதிக்காட்டினாலும் அதை நம்ப மாட்டார்கள். குர் ஆன் 26:199

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்கையை முழுவதுமாக வரலாறில் பதிவு செய்ய வராலாறு ஆய்வாலர்களால் முடியவில்லை ஏனெனில்.  நாற்பது வயது வரை வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல். அரேபியமன்னில் ஒரு சாதரன குடிமகனாகவே வாழ்ந்தார்கள். அவர்களுடைய நாற்பதாவது வயதில் தான் அவர்கள் தனக்கு இறைவனிடமிருந்து செய்தி அறிவிப்பதாக உலகுக்கு அறிவித்தார்கள்.



0 கமென்ட் :