விளை நிலம்


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

இஸ்லாமிய கல்லூரி ஒன்றில் பனியாற்றி,  இஸ்லாத்தை போதிக்கவும் இஸ்லாத்தை அதன் தூய வழியில் பின் பற்றியும் வந்த எனக்கு தெரிந்த ஆலிமா ஒருவர். கடந்த வருடம் கல்லூரி விடுமுறையை கழிக்க தனது சித்தியின் வீட்டுக்கு சென்ற அவர். சித்தியின் வீட்டில் வேலை பார்த்து வந்த மாற்று மத சகோதரர் ஒருவருடன் ஓடி விட்டார்.


அவர் மீது அதிகம் பாசமும் நேசமும் கொண்ட அவர் குடும்பத்தினர் அவரை மீட்டு விடும் நோக்கத்துடன். காவல்துறை உதவியை நாடினார்கள். அந்தப் பெண்ணின் மீது எல்ல விதத்திலும் கரிசனம் காட்டிய அத்தனை பேறும் காவல் நிலையத்தில் காத்திருந்தனர்.  காவல்துறை அந்தப் பெண்ணை அவர் ஓடிச் சென்ற பையனுடன் அழைத்து  வந்தார்கள்.


பட்டுப்புடவையில் நெற்றியில் குங்குமத்துடன்  ஆட்டோவில் இருந்து இறங்கிய அவரை பார்த்து விட்டு. ஆச்சிரியம் பட்டேன் இதுவரை பர்தாவில் பார்த்து வந்த நான். முகத்தில் மஞ்சல் பூசி இருந்தால் அவரை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடிய வில்லை.

காவலர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். உங்களை உங்கள் பெற்றோர் அழைத்துச் செல்ல விரும்புகிறார்களே என்று கேட்டதற்கு. நான் என் கணவரோடு செல்லவே விரும்புகிறேன் என்றார். இது அத்தனையையும் ஒரு ஓரமாக நின்றே அப்பெண்ணின் கணவரும் அவர் குடும்பத்தினர்களும் கவணித்துக் கொண்டிருந்தனர். உறுதியாக அவர்தன் கணவரோடு செல்வதில் உறுதியாக இருந்தால். அவர் அவர் கணவரோடு அனுப்பபட்டது.


இந்த சம்பவத்தில் எனக்கு தெரிந்து அதிகம் பாதிக்கப் பட்டது அப்பெண்ணின் தாயார்தன். அவரைதான் நீ உன் பெண்ணை ஒழுங்காக வளர்க்க வில்லை என்று அதனை பேறும் சாடினார்கள். இந்த சம்பவத்திற்கு பின் அதிகம் தன்னுடைய மனைவி பாதிக்கப் பட்டு விட்டாள் அவளுக்கு, ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் எல்லாம் கரித்து கொட்டுவதால்.

எனக்கு என் மனைவியை தேற்றுவது மிகவும் கடிணமாக உள்ளது சகோ என்றார். எனக்கும் அவர் மனைவி நெருங்கிய உறவினர் என்பதால் அவரை சந்திது எனக்கு தெரிந்த சில விசயங்களை பேசிக்கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெறியுமா சகோதரி ஒருமனிதன் பிறக்கும் போது இருக்கும் எலும்புகளில் இருபத்தி ஏழு எலும்புகள் வளரும் காலங்களில் கணாமல் போய் விடுகிறது.

சில எலும்புகள் வேறோரு எலும்புடம் இணைந்து கொள்கின்றன சில எலும்புகள் உடலை விட்டே அகன்று விடுகின்றன!? ஆதமின் மனைவியை ஆதமின் விலா எலும்பில் இருந்து படைத்திருப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. நீங்கள் உங்கள் கணவரின் விலா எலும்பில் இருந்து அல்லாஹ் உங்களை படைத்திருக்கலாம்.

எனெனில் மகள் மதம் மாரிபோய் திருமணம் செய்து கொண்டது கூட உங்கள் கணவரை பாதிக்கவில்லை. நீங்கள் மணமுடைந்து இருப்பதை அவரால் தாங்கி கொள்ளவே முடிய வில்லை,  நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்! என்றேன். உங்கள் மகளை நீங்கள் கண்ணியமான முறையில்தான் வளர்த்தீர்கள் நான் கூட அறிந்துள்ளேன்.


நல்ல கல்வி நல்ல சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்பட்ட உங்கள் மகள், நிச்சயமாக நல்லதையும் தீயதையும் பிரித்துப் பார்த்து அறியும் தன்மை கொண்டவர். அதனால் உங்கள் வளர்ப்பு வீன் என்று சொல்ல மாட்டேன். நீங்கள் எப்படி உங்கள் கணவரின் விலா எலும்பில் இருந்து படைக்கப் பட்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறனோ. அது போல் உங்கள் மகளும் அந்தப் பையனின் விலா எழும்பில் இருந்து  படைக்கப்பட்டுஇருக்கலாம் என்று நான் நம்புகிறேன் என்றேன்!.


அதுவரை எனது பேச்சை கேட்டுக் கொண்டிருத அவரும் அவர் கணவரும் திடுக்கிட்டனர்!. அவர்கள் மேலும் கேள்விகளை கேட்டார்கள், இந்த உரையாடல் யாருடைய நம்பிக்கையை தகர்ப்பதல்ல இந்த கட்டுகரை எனது புரிதலின் வழியே.


உங்கள் மனைவி உங்கள் விலா எலும்பில் இருந்துதான் படைக்கப்பட்டிருப்பார் என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியாது. எனெனில் அவருக்கும் உங்களுக்குமான ரத்த வகைகள் வெவ்வேறாக இருக்கலாம். இதை சில நடத்தைகள் மூலமாகவும் சில உணர்வின் மூலமாகவுன் அறியலாம்.


ஒரு பெண் தனது பிறந்த வீட்டில் எவ்வளவு சீறும் சிறப்போடும் வளர்க்கப் படுகிறாள் என்பதை உற்று நோக்குங்கள். அவள் புகுந்த வீட்டில் எவ்வாறு நடத்தப்படுகிறாள் என்பதையும் ஒப்பு நோக்குங்கள்.


பிறந்த வீட்டில் அவளுக்கு இருக்கும் சுதந்திரம் நிச்சயமாக புகுந்த வீட்டில் பரிபோய் விடும். அவ்வாறு இருக்கும் போது தனது புகுந்த வீட்டில் எல்லா விசயத்திலும் அவள் அட்ஜஸ் மெண்ட் செய்வது ஏன்!?. நிச்சயமாக இதற்க்கு தம்பத்தயம் வாழ்க்கை மட்டும் காரணம் அல்ல. அவ்வாறு கூறுவது பெண்களின்  இயல்புக்கு பொருத்தமானதும் அல்ல.


இதை இன்னொரு கோணதிலும் பார்க்கலாம் தனது மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்ய ஒரு தந்தை முடிவெடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவர் மட்டும் சுயமாக தனது மகன் மகள் விசயதில் முடிவெடுத்து விட முடியாது. அவர் அவரின் மனைவியை கண்டிப்பாக கலந்தோசனையை மேற்கொள்வார்.


மேலும் சீறோடும் சிறப்போடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் அத்தனை மரபுகளையும் உடைந்தெரிந்து விட்டு தனக்கு கொஞ்சம் கூட பழக்கம் இல்லாத மரபுக்குள் நுழைவது என்பது சாத்தியமான விசயமா. இது எந்த மதம் சார்ந்த மரபுக்கும் இது பொருந்தும். எவ்வளவு பாதுகாப்புடன் வளர்த்தாலும் மதம் சார்ந்து போதிக்கப் பட்டாலும் சரியே.

இதை இங்கு ஒப்பு நோக்குங்கள் கணவண் சம்பாதிக்க வெளிநாடு செல்லும் போது. சில பெண்கள் கணவணின் தற்காளிக பிரிவை தாங்க முடியாமல் அழுகிறார்களே ஏன். அது தாம்பத்ய பிரிவை என்னியா சிந்தியுங்கள் நீங்கள் வெளிநாடுகளில் தங்கத்தை சம்பளமாக பெற்றாலும் இந்தப் பிரிவு பெண்களைப் பொருத்தவரை சமன் செய்ய முடியாததே!

யார் வந்து தடுத்தாலும் வீட்டை விட்டு வெளியேரும் காதல் ஜோடிகளை தடுப்பது என்பது முடியாத காரியமே!?.  நிச்சயாமாக நமது பிள்ளைகளுக்கு அல்லாஹ் தகுந்த ஜோடியை படைத்திருப்பான். இனிமேல் அவர்கள் பிறக்கவா போகிறார்கள் பிறந்து இருப்பார்கள். என்று வரன்கள் தேடி அளுத்துக் கொள்ளும் தாய் தந்தையர்களுக்கு எனது தாயார் ஆறுதல் கூறுவதை கேட்டிருக்கிறேன்.


அதனால் உங்கள் பெண்ணுக்கு பிறந்தவன் நீங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு மாற்றமான கொள்கையில் பிறந்து இருக்கிறான். அது படைத்தவன் படைப்பினங்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம் அதற்க்கு நாம் என்ன செய்வது!. உங்கள் பிள்ளையை நீங்கள் மனிதனுக்கு ஏற்ற சரியான மார்க்கதில் வளர்த்திருப்பதால். அது வீண் போகாது அல்லாஹ் நாடினால் நிச்சயம் உங்கள் பெண் புகுந்த வீட்டில் மாற்றத்தை கொண்டு வருவாள். அவள் நேர்வழி பெற வேண்டி அல்லாஹ் விடம் துவா செய்யுங்கள்.

நிச்சயமாக அநீதி இளைக்கப்பட்டவனுடைய துவாவை அங்கிகரிக்கும் அல்லாஹ் பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு செய்யும் துவாவையும் அங்கிகரிப்பான்.  இந்த சந்திப்பு உரையாடல் நிகழ்வை ஒட்டி என் மனைவி ஹூர்லீன் பெண்களை சொர்கத்தில் அல்லாஹ் ஆண்களுக்கு மட்டும்தானே கொடுக்கிறான் ஏன் பெண்களுக்கு இல்லை என்றார்!?. இந்தக் கேள்வியை பதிவின் நீளம் கருதி தனி தலைப்பில் பதிவிடலாம் இன்ஷா அல்லாஹ்.
பி.கு. மாற்று மத சகோதருடம் திருமண வாழ்வை மேற்கொண்ட அந்தப் பெண் மீண்டும் தனது புகுந்த வீட்டார் அனைவருடனும் சத்திய மார்க்கத்தில் இணைந்தார். அவரின் சித்தியை தவிர அப்பெண்ணின் வீட்டார் அவரை தள்ளியே வைத்திருப்பது ஏன் என்று விளங்க வில்லை.

அப்பெண்ணின் தாயரிடம் கூறினேன் உங்கள் மகள்தான் நீங்கள் விரும்பிய மார்த்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டாரே ஏன் நீங்கள் அவரை சென்று பார்க்கக் கூடாது என்றேன். மவுணமாக இருந்தார்.  இன்ஷா அல்லாஹ் அவர் மகளுடன் தாய் மகள் உறவை மேன்மைப் படுத்த படைத்தவனிடம் இறஞ்சுகிறேன்.



0 கமென்ட் :