கொள்ளையர்கள் தினம்


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக
 
மொபைல் வழியாக இஸ்லாமிய அழைப்புப்பனி செய்து வரும்போது. சில சகோக்களிடம் அவர்களின் அழைப்பேசி என்களை  வாங்குவது உண்டு. அவ்வாறு வாங்கும் நம்பர்களுக்கு குறுஞ் செய்திகள் அனுப்பும் போது, ஆண்கள் பெயரில் இருக்கும் நம்பர்களில் இருந்து சில பெண்கள் பேசுவது உண்டு.

 
இது பற்றி என்கள் கொடுத்த சகோக்களிடம் கேட்டால் அப்படியா என்பார்கள், அதற்க்கு நான் சகோ நீங்கள் தந்த என்னுக்குக் குறியவரின் பெயர் ஆண் பாலக இருக்கிறதே, அந்த என்னுக்குறியவர் பெண்ணாக இருக்கிறாரே, என்று மிக நெருக்கமான சகோவிடம் கேட்டேன். அது அப்படித்தான் சில முக்கியமான அமர்வில் இருக்கும் போது அவர்களிடமிருந்து போன் வந்தால்.

உங்களை போன்றவர்களால் கண்டு பிடிக்க முடியாது அல்லவா அதனால் பெயரை மாற்றி பதிவு செய்துள்ளேன் என்று ரொம்ப கூலாக கூறினார். அது போல் சில பெண்கள் தரும் என்களில் இருந்தும் ஆண்கள் போன் செய்வார்கள். அவர்களிட சகோ உங்கள் என் பெண் பெயராக அல்லவா எனக்குத் தரப்பட்டது என்பேன், எனக்கு என்களை தந்தவரை அவரிடம் கூறினால் ஓ அவங்களா? என்று ஓரு கேலியான விசாரிப்புடன் இணைப்பு துண்டிக்கப் படும்!?. 

ஒரு மனிதன் தனது இளைமையான காலங்களில் ஒரு பெண்ணை நேசிக்கிறான், அவண் நேசிக்கும் பெண்ணும் அவணை நேசிக்கிறாள். ஏதோ ஒரு காரணம் அவர்கள் இருவரும் திருமண வாழ்வில் ஒன்றிணைய முடியாமல் போய் விடுகிறது. அவன் வேறு பெண்ணையும் அந்தப் பெண் வேறு ஒரு ஆணையும் மணம் முடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் எதவது ஒரு காலக்கட்டத்தில் சந்தித்து கொள்கிறார்கள். இப்படி இவர்கள் சந்திப்பது இவர்களுடைய வாழ்வில் எதவது ஒரு புயலை உருவாக்கமல் இருக்காது. எனெனில் காதல் என்பது ஒரு இணம் புரியாத வலி அது உயிரையே கூட கொள்ளும் வலிமை கொண்டது!?. 
 

ஒரு மழைவிழும் மாலை நேரம் மார்கட்டில் சந்த்தித்து உன் முகவரி தந்து போனாய். உன் விலசம் நான் வந்த போது உன் வீட்டுச் சுவரில் மாட்டி இருந்த உன் கல்யாண போட்டோ சொல்லியது உனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. உன் கணவரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது தேணீர் தருவதற்க்கு நீ வந்தாய் உன் விரல்களை நான் தொட்டு விடக் கூடாது என்று நானும் என் விரல்களை தொட்டு விடக்கூடாது என்று நீயும் தடுமாறியதில் சற்றுத் தடுமாறியது தேணீர் கோப்பை. விடை பெற்று நான் வந்த போது வாசல் வரை வழியனுப்ப வந்த உன் கணவர் கூறினார் எண்னை விட நீங்களே அவளை திருமணம் செய்து இருக்கலாம் என்று. அன்றுதான் நேசித்தேன் உன் காதலின் ஆழத்தை!?.

 
புரிந்ததா சகோதர சகோதரிகளே உங்கள் காதலின் ஆழம். உங்கள் காதல் திருமண வாழ்வில்தான் புரியவே ஆரம்பிக்கிறது. அதனால் உங்கள் திருமண வாழ்வை உங்கள் முன்னால் காதல் சிதறடித்து விடலாம் அதனால் காதல் செய்யுங்கள் உங்கள் மணைவியை, உங்கள் கணவரை. 

ஒரு பெண்ணிடம் நான் கூறினேன் நீ உன் கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டு உன் தாய் வீட்டுக்கு வரதே, உன் கணவரிடம் கூறிவிட்டு அவரையும் கூட்டிக் கொண்டு சந்தோசமாக உன் தாய் வீட்டுக்கு வா இல்லை என்றால். அவர்கள் என்றோ வளர்த்த காதல் அவர்களை எதவது ஒரு வழியில் சூழ்ந்து கொள்ளும் அது உன் வாழ்வையும், இன்னொரு மனிதனின் வாழ்வையும் நிலை குலைத்து விடலாம்!?.
 

பிப்ரவரி 14 இது காதலர்கள் கொண்டாட உருவக்கப்பட்ட தினமாம், என் அற்புதமான கண்டு பிடிப்பு இதற்க்கு சில சமுக ஆர்வாளர்கள் ஆதரவு வேறு.  நவின கருத்தாக்கம் கொண்ட இளைஞனும் இஞைங்கியும் காதலின் வழியே கண்டு பிடித்த ஒன்று தான். லிவிங் டூ கெதர் இது என்ன புதுசா என்று ஆச்சரியப்படதிங்க லிவிங்க் டூ கெதர்ன. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மனதுக்கு பிடித்த ஆணோடும் பெண்ணோடும் சேர்ந்து வாழ்வது. கெதர் வாழ்கையில் எல்லாத்தையும் பகிர்ந்துப் பாங்கலாம் அவர்கள் இருவரும் விரும்பினால் மட்டுமே திருமணம் செஞ்சிப்பாங்களாம்.

திருமணம் செய்ய விருப்பம் இல்லைனா பிரிஞ்சிடுவாங்க. நல்ல வேலை ஐ. டி. கம்பெனிங்க ஊத்தி மூடிட்டாங்க இல்லைன்ன இவங்க ஒரு பெரிய அளவில் பெரு நகரங்களில் ஊடுருவி இருப்பாங்க. (இந்த லிவிங்க் டூ கெதர் பற்றி நிறைய கேள்வி எனக்கு இருக்கு யாரவது கெதர்கள் எனக்கு விளக்கம் தரலாம்)


ஒரு கெதரின் தாய்  கெதர் வாழ்க்கையில் ஒரு கெதரை பெற்று இருக்கிறார் என்று  வைத்துக் கொள்வோம். அந்த கெதருக்கு தந்தையாக யாரை குறிபிடுவார் கெதர் வாழ்க்கையில் பெற்ற ஒரு குழந்தைக்கு மரபணு சோதணை எல்லாம் செய்து விட்டு இன்ன கெதருடன் வாழும் போது உன்னை பெற்றேன்.  

 
இன்னொரு கெதருடன் வாழும் போது உன் தங்கையை பெற்றேன் என்று ஒரு பெண் கூறுகிறாள் என்றால் இது என்ன விளைவை சமுகத்தில் ஏற்படுத்தும் என்று நாம் சொல்லத் தேவை இல்லை!?. திருட்டுத்தனமாக உல்லாசம் புரிபவர்களையும். கள்ளக் காதல் என்ற என்றே அழைகின்றனர் என்ன ஒரு சமுக ஒற்றுமை. இவர்களை ஆசை நாயகி. ஆசை நாயகன் என்று அழைத்தால் என்ன குறைந்து விடும்.


ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆசை நாயகி அந்த வீட்டு எஜமானனா ஆசை நாயகனுடன் உல்லாசமாக இருந்து ஒரு குழந்தையை பெற்று விடுகிறாள் . என்று வைத்துக் கொள்வோம் அந்த குழந்தையை கண்டிப்பாக தவரான நடத்தையில் பிறந்தது என்று அவள் கணவணிடம் அவள் கூறமாட்டாள். அதனால் மிகப் பெரிய பணக்காரணா அவள் ஆசை நாயகனுக்கு பெற்ற பணக்காரணின் குழந்தை ஒரு சதரண குடிசை வீட்டில். எவனோ ஒருவணை தன் தந்தை என்று நினைத்து வளரும்!?.


அது போலவே வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரனுடன் உல்லாசம் அனுபவித்து. அவன் மூலம் கருவுரும் வீட்டு எஜமானி தன் வேலைக்காரனுக்கு பிள்ளை உண்டாகி இருப்பதாக சொல்ல மாட்டாள். அதனால் அவள் பெரும் குழந்தையை தனக்குதான் பிறந்தது என்று என்னி அவளின் பணக்கார கணவன் தான் வளர்ப்பான்.


இது ஒரு மனிதனின் உண்மையையும் உழைப்பை அன்பையும் கடமையையும், அன்பு என்னும் போர்வையில் சூறையாடுவது ஆகும். லிவிங்க் டூ கெதர்களும் ஆசை நாயகிகளும் ஆசை நாயகன்களும் இந்த மனித சமுதாயத்தை காதல் என்னும் போர்வையில் சூறையாடியே வருகின்றனர்.



உலக மரபுகள் அனைத்தும் திருமண வாழ்வு முறையில். ஒரு ஆணும் பெண்ணும் இணைவதையே கட்டமைக்கின்றன. அதில் இஸ்லாம் மட்டுமே ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய மஹர் என்னும் மணக்கொடையை கட்டாயமாக பெண்களுக்கு அளிக்கவும். அவர்கள் திருமண வாழ்வில் இணையும் போது கண்டிப்பாக சாட்சிகள் தேவை என்பதை. மனித சமுதாயம் முன் வைக்கிறது அதுதான் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பானதும் கூட.



அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள். குர் ஆன் 2:42.


0 கமென்ட் :