பகுத்தறிவு


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.


எனது தோழி ஒரு நாத்தீகவாதி அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வியை. மையப்படுத்தியே இங்கே பதிவாக. முஸ்லிம்கள் அவர்களுடைய இறை இல்லமான காஃபாவில் தவாப் என்று ஒரு கட்டிடத்தை சுற்றி வருகிறார்கள். பின்பு ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் தொங்கு ஓட்டம் ஓடுகிறார்கள். பின்பு சைத்தானுக்கு கல்லெரிகிறார்கள். பின்பு ஓன்று கூடி பிரியும் போது. ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் முடியையும் கொஞ்சம் வெட்டியும் கொள்கிறார்கள். இது எப்படி பகுத்தரிவு ஆகும்?.

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள் என்று நன்பர்களிடம் கேட்டேன். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள், அவர்களின்  மகனையும் மனைவியையும் யாரும் இல்லாத பலைவணத்தில் விட்டு விட்டு வந்தார்களே அதுதான் என்றனர்.
  
நான் அவர்களிடம் கேட்டேன் இந்த சம்பவத்தில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தியாகம் செய்ததாக கூற முடியாதே, உண்மையில் தியாகம் செய்தது அவர் மணைவி அல்லவா என்றேன்!?. மேலும் சிலரிடம் இது பற்றி கேட்டேன். அவர்கள் அவர் மகனை அறுக்க துணிந்தார்களே அதுதான் என்றனர். இந்த சம்பவத்திலும் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தியாகம் செய்ததாக கூற முடியாதே. உண்மையில் தியாகம் செய்தது, அவர் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் அல்லவா என்றேன்.

சிலர்கள் கூறினார்கள் இப்றாஹீம் (அலை) அவர்களை அவரை நெருப்புக் குண்டத்தில் போடும் போது. உறுதியுடன் உயிர் தியாகம் செய்ய முன் வந்தார்களே அதுதான்  தியாகம் என்றனர்!. உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள். ”தியாகம்” செய்ததாக அல்லவா அல்லாஹ் கூறுகிறன்.

நீங்கள் குர் ஆனில் இப்றாஹீம் (அலை) அவர்களை பற்றி படித்துப் பார்த்தால். நெருப்புக் குண்டத்தில் தூக்கிப்போடும் முன் நான்கு நிகழ்வுகளும். அதற்க்குப் பின் நான்கு சம்பவங்களையும் பார்க்கலாம். ஆனால் இது எல்லாம் இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் அல்லாஹ் கட்டமைத்த வாழ்கைத் திட்டங்கள்.  உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் செய்த தியாகம் தான் என்ன!?.

இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இசை முரசு நாகூர் . ஹணிபா அவர்கள் கூட தனது பாடல் ஒன்றில் ஹஜ்ஜிப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள் அன்று இப்றாஹீம் நபி செய்த தியாகத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்று தனது பாடலில் குறிப்பிடுகிறார்கள்.

அவரும் அவர் போன்று அவர் பாடல் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொண்டவர்களும், குர் ஆனின் மொழி பெயர்ப்புகளை படியுங்கள்! அல்லாஹ்விடம் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் என்ன தியாகம் செய்து. அல்லாஹ்வின் நெருங்கிய தோழர் ஆனார்கள் என்பது விளங்கும்!. நபி இப்றாஹீம் (அலை) அவர்களை மேலும் அறிய பின் உள்ள வசனங்களை படியுங்கள்.

பகுத்தறிவின் பாசரை நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வாழ்வில். என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என பார்ப்போம். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் விக்ரகங்களை செய்து விற்பனை செய்யக் கூடிய ஒருவருக்கு மகனாக பிறந்தார்கள். இப்றாஹீம் (அலை) தமது தந்தை ஆஸரிடம் விக்கிரகங்களை கடவுள் எனக் கருதுகிறீகளா? உங்களையும் உங்கள் சமுகத்தினரையும் பகிரங்க வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். குர் ஆன் 6:74. என்று கூறுகிறார்கள்.

அதன் மூலம் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை தனி ஆளக வரக்கூடிய ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமான நபராக!? நின்று சந்திக்கிறார்கள். அது போலவே விக்ரகங்களை ஒரு கோடலியால் அடித்து தரைமட்டமாக்கி விட்டு விட்டு. அதை அடித்து நொருக்கியது அந்த பெரிய விக்ரகம்தான் உடைத்தது என்று அதன் மேல் பழியைப் போடுகிறார்கள்.

சூரியன் சந்திரன் நச்சத்திரம் கோள்கள் என ஒவ்வொன்றையும் ஆய்வு செய்கிறார்கள். ஒவ்வொரு ஆய்வின் அடிப்படையிலேயே தமது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இந்த பகுத்தரிவுவாதியைதான் அல்லாஹ் தனது தூதராக தேர்வு செய்து கொள்கிறான்.

வயது முதிர்ந்த காலத்தில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களை அல்லாஹ். தனது விருதத்தை சுண்ணத் செய்து கொள்ளுமாறு கட்டளை இடுகிறான். உடனே அவர் உலகிலேயே முதன் முறையாக தனது பிறப்புறுபை விருத்த சேதனம் செய்து கொள்கிறார். வயது முதிர்ந்த காலத்தில் உனக்கு பிள்ளை பிறக்கும் என்று. அல்லாஹ் கூறினால் அதை அப்படியே நம்புகிறார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வைத்த சோதனை அனைத்தையும் மறு ஆய்வின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு அல்லாஹ் வைத்த பரிச்சை அனைத்திலும் தேர்வாகிறார்கள்!.


அனைத்தையும் சுயபரிசோதனை செய்து அதை ஏற்றுக்கொள்ளும் ஒரு பகுத்தரிவுவாதி. அவரின் பகுத்தரிவுக்கு சன்றும் பொருந்தாத விருத்த சேதனத்தை ஏற்றுக் கொள்கிறார். அல்லாஹ் இருக்கிறான் என்று சொன்னால் மட்டும் போததாது. தனது பகுத்தரிவு சொல்லும் இது பகுதரிவுக்கு பொருந்தாது என்று.

ஆனால் அல்லாஹ் சொல்லி விட்டான் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவன் தான் உண்மையான பகுத்தரிவுவாதி. அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் தியாகத்திலேயே சிறந்த தியாகம் அறிவு தியாகமே. அதை நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் இருந்து நாம் படிப்பினை பெற்று. நமது பகுத்தரிவை அல்லாஹ்வுக்கு சமர்ப்பிக்கலாம்.

நாம் ஒப்பு நோக்க நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்வில் நடந்தவைகளில் ஒன்றை பார்க்கலாம். நபி மூஸா (அலை) அவர்களை பின் பற்றியவர்களுடன் பிஃர் அவ்ன் படைகள் துரத்தி வரும் போது. தப்பிப்பதற்கு கடல் இருக்கும் திசையை நோக்கி நகர்கிறார்கள்.

ஒரு பகுத்தரிவுவாதியான மூஸா (அலை) அவர்கள்  இவ்வாறு செய்தது அவர்களை பின் பற்றிய மக்களை மட்டும் அல்லாமல். பகுத்தரிவு கண்ணோட்டத்தோடு பார்க்கும் எவருக்கும் பொருந்தாது. இருந்தாலும் தமது இறைவனின் கட்டளையையேற்று கடலை நோக்கி நகர வேண்டும் என்றேதான் தனது படையை நகர்த்துகிறார்கள்.
  
ஏன் இவ்வறு கடலின் முன் கொண்டு வந்து எங்களை நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்று அவரை பின் பற்றியவர்கள் கேட்டபோது, என்னுடைய ரப்பு என்னை கைவிட மாட்டான் என்று கூறுகிறார்கள். கைத்தடியால் கடலை பிளந்தார். என்று திருக்குர் ஆன். 20:77;26:63. வசனங்கள்கூறுகிறது

அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு, உன் கையில் இருக்கும் கைத்தடியால் கடலை அடி என்று கட்டளையிடுகிறான். உண்மையில் இங்கு பகுத்தரிவோடு ஒப்பு நோக்குங்கள். மூஸா (அலை) அவர்கள் அந்த கைத்தடியை அவர்களின் எதிரிகள் இருக்கு திசையில் அடித்து இருந்தாலாவது அது உண்மையில் பெரிய பாம்பாக மாறி எதிரிகளுடை படைத்தளவரங்களை விழுங்கி இருக்கும். 

முஸா தமது கைத்தடியை போட்டார்.உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. திருக்குர் ஆன். 7:107. உமது கைத்தடியைப் போடுவீராக என்று அறிவித்தோம். உடனே அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.திருக்குர் ஆன். 7:118
ஆனல் அல்லாஹ் கடல் மேல் அல்லவா அடிக்க சொல்கிறான். சரி கடல்மேல் அடித்தாலும் அது பாம்பாகதானே மாறும், அப்படித்தானே தன்னிடம் இருக்கும் கம்பு ஏற்கனவே பாம்பாக மாறி இருக்கிறது என்று பகுத்தரிவுக்கு கேள்வி வரும். ஆனால் இங்கு பகுத்தரிவை பின் தள்ளி வைத்து விட்டு இறைவனின் கட்டளைக்கே மூஸா (அலை) அவர்கள் முன்னுரிமை தருகிறார்கள்.

பகுத்தரிவின் அளவு என்பது இறைவனின் கட்டளைக்கு சமர்பனம். ஒரு மனிதன் தியாகம் செய்வதில் சிறந்த தியாகமாக அவனின் பகுத்தரிவை படைத்தவனின் கட்டளைக்கு முன்  தியாகம் செய்வதாவே இருக்கும். என்பது மறுக்க முடியாத தியாகம்.

மனிதனின் என்னங்களில் சைத்தான் புகுந்து இதை படைத்தது யார்? அதைப்படைத்தது யார்? என்று கேள்வி எழுப்புவான். கடைசியில் அல்லாஹ்வைப் படைத்தது யார் என்று கேள்வியை உங்கள் உள்ளங்களில் போடுவான் என்பது நபி மொழி.

பகுத்தரிவை படைத்தவனிடம் சமர்பித்து மறு உலக வாழ்வில் படைத்தவனிடம் நீங்கள் உரையாடும் வாய்பைப் பெறலாம். என்று கூறுகிறது இஸ்லாமிய நம்பிக்கை. கடவுள் மறுப்புக்கு உங்கள் பகுத்தரிவு வாதம் பொருந்தும் என்றால். மரணத்திற்கு பின் நாம் என்ன பரிணாமத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று  சொல்லுங்கள்



0 கமென்ட் :